திருவண்ணாமலை நிலச்சரிவு.. நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 7-வது நபரின் உடல் மீட்பு..!!
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில் திருவண்ணாமலை பகுதியிலும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில் திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வஉசி நகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.
இதில் ஒரே வீட்டில் வசித்து வந்த தம்பதி, அவரது மகன், மகள் மற்றும் உறவினரின் மூன்று சிறுமிகள் என மொத்தம் ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களுடைய நிலை என்ன என தெரியாமல் நேற்று கேள்விக்குறியாக நின்ற நிலையில் மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டது. முதலில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியை மேற்கொள்ள முயன்றனர். ஆனால் அங்கு மின்சார வசதி துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது.
அதன் பிறகு நேற்று தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குழுக்களாக வருகை தந்த நிலையில் 3 குழுக்களாக மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதுவரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 7வது நபரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. நீண்ட நேர தேடுதல் பணிக்குப் பின் ரம்யா என்பவரின் உடலை தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்டது.
Read more ; விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!!