For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானை உயிரிழப்பு.. சோகத்தில் பக்தர்கள்..!!

Tirunelveli Nellayapar temple elephant Gandhimati has died due to ill health leaving the devotees in shock.
09:23 AM Jan 12, 2025 IST | Mari Thangam
புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானை உயிரிழப்பு   சோகத்தில் பக்தர்கள்
Advertisement

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் யானை காந்திமதி, கடந்த 1985 ஆம் ஆண்டு நன்கொடையாளர்கள் மூலம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. கோவில் விழாக்கள் சிறப்புப் பூஜைகளில் காந்திமதி யானை கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசிவழங்கி வந்ததது. தற்போது யானைக்கு 56 வயதான நிலையில், வயது முதிர்வு காரணமாக காந்திமதி யானைக்கு மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

 காந்திமதி யானைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மூட்டு வலி தொடர்பான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூட்டு வலி அதிகமான நிலையில், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக யானை காந்திமதி படுக்காமல் நின்றவாரே தூங்கி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை காந்திமதி யானை படுத்து தூங்கிய நிலையில் மீண்டும் அதனால் எழ முடியவில்லை. இதனால் உடனடியாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து யானை காந்திமதிக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டன. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. இது தற்போது பக்தர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read more ; உதிர்ந்த இடத்தில் முடி மீண்டும் வளரணுமா?. தக்காளி சாறுடன் இத மட்டும் சேர்த்து யூஸ் பண்ணுங்க!

Tags :
Advertisement