For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தூள்...! 100 ஆண்டு கடந்த அரசு பள்ளிகளில் வரும் 23-ம் தேதி முதல்... தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு...!

The Department of School Education has ordered that school-wide centenary celebrations be held in government schools that have completed a century.
07:05 AM Jan 12, 2025 IST | Vignesh
தூள்     100 ஆண்டு கடந்த அரசு பள்ளிகளில் வரும் 23 ம் தேதி முதல்    தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு
Advertisement

வரும் 23-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நூறாண்டு கடந்த அரசுப் பள்ளிகளிலும், பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் 2,238 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டுகளைக் கடந்து மக்களின் நம்பிக்கைக்கு உரியவையாகத் திகழ்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டைக் கொண்டாடுவதன் வாயிலாக, பெற்றோருக்கும், மக்களுக்கும் அரசுப் பள்ளிகள் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். அதேபோல, மாணவர்களுக்கு உத்வேகமும், ஆசிரியர்களுக்கு உந்துதலும் ஏற்படும்.

மேலும், இவ்விழா பள்ளிகளின் வரலாற்று பதிவாகவும், உட்கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்பு போன்ற தேவைகளை சமூகப் பங்கேற்போடு உறுதிசெய்யவும் வாய்ப்பாக அமையும். மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் 22-ம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட உள்ளது. வரும் 23-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நூறாண்டு கடந்த அரசுப் பள்ளிகளிலும், பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடப் பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே , நூற்றாண்டுத் திருவிழாவை, ஆண்டு விழாவோடு இணைத்துக் கொண்டாடுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement