முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கொஞ்சம் வானம்.. உயர்ந்த மரங்கள்.. மர வீடு..!! கோவை அருகே சூப்பர் ஸ்பாட்.. வீக்கெண்ட் என்ஜாய் பண்ணுங்க!!

08:00 AM Oct 19, 2024 IST | Mari Thangam
Advertisement

நாள் முழுவதும் வேலை பார்த்து அலுத்து, வார இறுதியில் குழந்தைகளுடன் ஓய்வெடுக்கச் சரியான இடம் தேடி ஏங்குபவர்கள் தங்களது செக் லிஸ்டில் பரம்பிக்குளத்தை டிக் செய்து வையுங்கள். ஆண்டுதோறும் சென்றாலும் இந்த இடம் புது அனுபவம் தந்து கொண்டே இருக்கும். அமைதியான சோலை, வனத்தின் நடுவே தூக்கம், திகிலூட்டும் டிரெக்கிங் பயணத்துடன் ஓய்வு நேரத்தில் நல்ல நினைவுகளை அசைபோட ஏற்ற இடம் இது.

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள பரம்பிக்குளம் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திற்குள் இருக்கிறது. ஆனால் கேரள மாநிலத்தில் இருந்து இந்த பகுதிக்கு செல்ல சாலை வசதி ஏதும் இல்லை. அதனால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி - ஆனைமலை வழியாக டாப்சிலிப் கடந்து தான் இந்த அழகிய பரம்பிக்குளத்திற்கு செல்ல முடியும்.

பரம்பிக்குளம் சுற்றுவட்டார வனப்பகுதியில் 4 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பழங்குடியின மக்கள் சுற்றுலா வழிகாட்டியாகவும் அங்கு செயல்படுகின்றனர். முதலில் அங்கிருக்கும் வனத்துறை சோதனைச் சாவடியில் ஒரு நபருக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். வாகனத்திற்கு 80 ரூபாய் வரை வசூலிக்கப்படும். டிக்கெட் வாங்கிக் கொண்டு சுமாராக ஒரு 2 கி.மீ. தூரம் வரை சென்றால் யானைப்பாடி என்ற இடம் வரும். அங்கு சவாரி மற்றும் தங்கும் விடுதிகளுக்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க நம்முடன் வனத்துறை அலுவலர் ஒருவர் வருவார். அவர் வனப்பகுதியைச் சுற்றிக் காட்டுவார். அடர்ந்த வனப்பகுதி நடுவே பயணம் செய்வதனால் வனவிலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சேத்துமடை தாண்டி செல்ல நான்கு சக்கர வாகனம் அல்லது பேருந்தில் தான் பயணம் செய்ய வேண்டும்.

யானைப்பாடியில் இருந்து காட்டிற்குள் வனத்துறை வாகனத்தில் சவாரி செல்வதற்கு ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. வனத்துறை வாகனத்தில் 3 மணி நேரத்தில் மொத்தம் 54 கி.மீ. தூரம் காடுகளுக்குள் பயணம் செய்வது என்பது நாம் அனைவரும் எதிர்பாராத திர்ல்லான அனுபவமாக இருக்கும். ஆனால் வனத்துறையினர் சார்பில் பாதுகாப்பாக உள்ள 5 இடங்களுக்கு தான் அழைத்துச் செல்கின்றனர். இருந்தபோதிலும் செல்லும் வழியெங்கும் கூட்டம் கூட்டமாக மான்களும், காட்டு மாடுகளையும் நாம் பார்த்தவாறே செல்லலாம். புலிகள் கூட அந்த பகுதியில் உள்ளது.

இதற்கு அடுத்து தான் திரில்லிங்கான பயணமாக தேக்கு காடுகளின் வழியாக கன்னிமாரா தேக்கை பார்க்க அழைத்துச் செல்கின்றனர். இந்த மரங்களில் தண்டு பகுதிகளில் கிளைகள் இல்லாமல் உச்சியில் மட்டும் கிளைகள் விரிந்து, அடர்ந்த இலைகளுடன் ஒரு குடை போல இருக்கும் மரங்களை நாம் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு இருக்கும். இதற்குப் பெரிய வரலாறு உண்டு அதை அங்குப் போய் தெரிந்து கொண்டால் பிரம்மிப்பாக இருக்கும். இங்கு ஐ-லேண்ட், மர வீடு, காட்டேஜ் என பல வகையான தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப வீடுகளை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விவரங்கள் www.parambikulam.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பரம்பிக்குளத்தில் மக்கள் டிரெக்கிங், சவாரி மற்றும் உணவு உடன் ஒரு நாள் முழுக்க சுற்றிப் பார்க்க வனத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஒரு நபருக்கு 970 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. கோடை விடுமுறை முடிவதற்குள் இந்த ஸ்பாட்டுக்கு ஒரு முறை டிரிப் போய் பாருங்க...உங்களை நீங்களே மறந்துடுவீங்க..அந்த அளவுக்கு சம்மர் ஸ்பாட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Read more ; அலட்சியம் வேண்டாம்!. தொண்டையில் அடிக்கடி சளி சேருகிறதா?. புற்றுநோயாக இருக்கலாம்!.

Tags :
best tourist placesWeekendகோவைபரம்பிக்குளம்பாலக்காடு மாவட்டம்
Advertisement
Next Article