For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களே, உங்கள் முகத்தில் முடி அதிகமா வளருதா? அப்போ உடனே இதை செய்யுங்க..

tips-to-remove-facial-hair
06:01 AM Dec 09, 2024 IST | Saranya
பெண்களே  உங்கள் முகத்தில் முடி அதிகமா வளருதா  அப்போ உடனே இதை செய்யுங்க
Advertisement

பெரும்பாலும், பல பெண்களுக்கு உதட்டின் மேல்புறம் மற்றும் தாடை உள்ளிட்ட பகுதிகளில் ஆண்களை போலவே முடி சற்று அதிகம் வளரும். இதனால் அவர்கள் தங்களின் தன்னம்பிக்கையையே இழந்து விடுவார்கள். இதனால் அதிக பணம் கொடுத்து, சந்தையில் விற்கப்படும் பல கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் வாங்கி பயன்படுத்துவது உண்டு. இன்னும் சிலர் பார்லர் அல்லது மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது உண்டு. ஆனால், இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், இது போன்ற கிரீம்கள் மற்றும் சிகிச்சைகள் நிரந்தரமான தீர்வு அளிக்காது. இதற்க்கு மாறாக, நீங்கள் முகத்தில் வளரும் முடிகளை இயற்கையான பொருட்களை கொண்டு நிரந்தரமாக அகற்றலாம். எப்படி வீட்டிலேயே சுலபமாக முடிகளை அகற்றலாம் என்பதை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

Advertisement

இதற்கு முதலில், 1ஸ்பூன் தேனுடன், 2ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க வையுங்கள். நன்கு ஆறியவுடன், முடிகள் உள்ள இடத்தில் தடவி, ஒரு சில நிமிடங்கள் வைத்துவிட்டு கழுவினால் மகத்தில் உள்ள முடிகள் முற்றிலுமாக மறையும்.

பெரும்பாலும் கடலை மாவை முகப்பொழிவுக்காக பலர் பயன்படுத்துவது உண்டு. ஆனால் நாம் அந்த கடலை மாவை வைத்து மோதில் உள்ள முடி வளர்ச்சியை தடுக்கலாம். ஏனென்றா, கடலை மாவில் எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகள் உள்ளது. இதனால் முடி வளருவதை தடுக்க முடியும். இதற்கு நீங்கள் 2ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2ஸ்பூன் ரோஸ்வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து விடுங்கள். பிறகு இந்த கலவையை முடிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் முகத்தில் உலா முடிகள் உதிர்ந்து விடும்.

சோளமாவுடன், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் முடி உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து விடுங்கள். பின்னர், குளிர்ந்த நீரை வைத்து கழுவி, முகத்தை துடைத்து விடுங்கள். இதனால் முகத்தில் உள்ள உங்கள் முடிகள் நீங்கும்.

நீங்கள் பப்பாளி பழ துண்டை, மஞ்சள் தூளுடன் அரைத்து அதனை முகத்தில் தடவலாம். சுமார் 20நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால், முடிகள் நீங்கவது மட்டும் இல்லாமல் முகம் பளபளப்பாக இருக்கும்.

Read more: உங்க வீட்டு பெண் பிள்ளைகளுக்கு பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கா? அப்போ உடனே இதை செய்யுங்க..

Tags :
Advertisement