இன்வெர்ட்டர் பேட்டரி நீண்ட நேரம் உழைக்க டிப்ஸ்! என்ன செய்யக்கூடாது?
உங்கள் வீட்டில் பொருத்தியிருக்கும் இன்வெர்ட்டரை நீங்கள் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
கோடைக்காலங்களில் மின்வெட்டை சமாளிக்க ஒரே வழி வீடுகளில் இன்வெர்ட்டர் பொருத்தி கொள்வது தான். அதேசமயம் இன்வெர்ட்டரை சரியான முறையில் பராமரிக்கவும் வேண்டும். அப்படி பராமரித்தால் மட்டுமே இன்வெர்ட்டர் ஆயுள் நீடிப்பதோடு அவை சிறப்பாக இயங்கவும் செய்யும்.
இன்வெர்ட்டர் பேட்டரியை வீட்டில் இருக்கும் மற்ற பொருள்கள் போன்று சுத்தமாக வைத்திருங்கள். இன்வெர்ட்டர் பேட்டரியை பேக்கிங் சோடா கலந்த நீரில் இதன் டெர்மினல்களை சுத்தம் செய்ய வேண்டும். வழக்கமான சுத்தம் குறைந்தது மாதம் இருமுறையேனும் செய்வது ஆயுளை அதிகரிக்கும்.
போதுமான காற்றோட்டம் இன்வெர்ட்டர் பேட்டரி வைக்கும் இடத்தில் இருக்க வேண்டும். நேரடி சூரிய ஒளி மற்றும் வெப்பத்தை உண்டு செய்யும் இடங்களிலிருந்து இதை பாதுகாப்பாக வைப்பதை உறுதி செய்யவும். பேட்டரி இயங்கும் போது வெப்பம் அதிகரிக்கும் நிலையில் வெப்பநிலை இருக்கும் இடத்தில் இருப்பது அதிகப்படியான நீர் ஆவியாக கூடும்.
அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் போது நீண்ட நேரம் பேட்டரியை பயன்படுத்தாத போது அது பேட்டரி டிஸ்சார்ஜ் செய்யலாம். இன்வெர்ட்டர் பேட்டரியை மாதம் ஒருமுறையேனும் பயன்படுத்தி மீண்டும் சார்ஜ் செய்து வைப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். பேட்டரியின் ஒவ்வொரு கலத்திலும் இருக்கும் நீர் அளவை சரிபார்த்து தேவைப்பட்டால் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை சேர்க்கவும். அதேசமயம் குழாய் நீரில் இருக்கும் அசுத்தங்கள் பேட்டரியின் செயல்திறனை பாதிக்க செய்யலாம். அமில அளவு குறையும் போது சார்ஜ் செய்தால் போதுமான அளவு பேக்கப் கிடைக்காது. எனவே இன்வெர்ட்டர் பேட்டரி நீண்ட நேரம் உழைக்க வேண்டும் என்றால் முறையாக பராமரிக்க வேண்டும் என்பது தான்.
லாரியில் உள்ள பேட்டரி இருக்கும் பெட்டியில் "தினமும் என்னை கவனி" என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். லாரி ஓட்டுநர் நாள்தோறும் பேட்டரியை தவறாமல் பராமரித்து இயக்க வேண்டும் என்பது தான் இதன் முக்கிய நோக்கம்.