தண்ணீர் தொட்டியை சுலபமாக சுத்தம் செய்ய வேண்டுமா? இந்த ஒரு மரத்துண்டு போதும்..
பலர் தங்களின் வீட்டை அடிக்கடி துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்வது உண்டு. என்னதான் வீட்டை சுத்தம் செய்தாலும் பல நேரங்களில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய மறந்து விடுவார்கள். இப்படி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் விடுவதால் தண்ணீர் தொட்டிக்குள் பாசி மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகி தண்ணீரில் கலந்து விடும். அந்த நீரை நாம் பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயதானவர்கள், வேலைக்கு செல்பவர்கள் போன்ற ஒரு சிலர், தொட்டியை சுத்தப் படுத்த முடியாத சூழ்நிலையில் இருப்பது உண்டு. மேலும் சிலர், அதிக பணம் கொடுத்து தண்ணீர் தொட்டியை கழுவ வைப்பது உண்டு. இனி நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். தண்ணீர் தொட்டியை சுலபமாக சுத்தம் செய்ய ஒரு சிறந்த தீர்வு உள்ளது.
ஆம், இந்த ஒரு பொருள் உங்கள் தண்ணீரை தினமும் சுத்தம் செய்கிறது. இந்தப் பொருளைத் தொட்டியில் போட்டால் போதும் சுமார் 100 ஆண்டுகளுக்குத் தொட்டித் தண்ணீரைச் சுத்தம் செய்யத் தேவையில்லை. இந்த பொருளை தண்ணீரில் போடுவதால் ஓரிரு வருடங்கள் தண்ணீர் தெளிவாக இருப்பதோடு அதில் பூச்சிகளும் வராது. மேலும், பாசிகள் வரும் தடயத்தையும் பார்க்க முடியாது. இத்தனை பயன் தரும் அந்த பொருள் ஒரு மரத்துண்டு என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், பர்ப்பிள்ஹார்ட் என்றும் அழைக்கப்படும் வயலட் மரத்தின் துண்டு தான் நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தக்கூடியது.
பா வயலட் மரத் துண்டில், பக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்க உதவுவதால், வயலட் மரத்தின் சிறிய துண்டை தண்ணீர் தொட்டியில் வைப்பது சிறந்தது. மேலும், இந்த வயலட் மரத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த மரம் தண்ணீரில் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகாது. எனவே பழங்காலத்திலிருந்தே படகுகள் தயாரிக்க இந்த மரம் பயன்படுத்தப்பட்டது. சந்தையில் இருந்து உயர்தர வயலட் மரத் துண்டை வாங்கி, பின் அதனை நன்றாக கழுவி சுத்தமான தண்ணீர் தொட்டியில் வைக்கவும். இதனால் தொட்டியை சுத்தம் செய்வதில் உள்ள சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
Read more: எச்சரிக்கை!!! பெற்றோரின் கவனக்குறைவால் துடிதுடித்து உயிரிழந்த குழந்தைகள்..