மத்திய அரசின் இலவச கேஸ் சிலிண்டர் உங்களுக்கும் வேண்டுமா..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? மிஸ் பண்ணிடாதீங்க..!!
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) என்பது ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்கும் மத்திய அரசின் திட்டமாகும். இந்த திட்டத்தின் பயனாளிகள் பெண்களே என்பதால் இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள், 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதுவும், இந்திய குடிமகளாக இருக்க வேண்டும். இதற்கு முன்பு எல்பிஜி கணக்கு ஏதும் அவருக்கு இருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் பெயர் SECC-2011 பட்டியலில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அரசாங்கத்தால் வழங்கப்படும் வேறு எந்த திட்டத்திலும் பதிவு செய்யக்கூடாது.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, சேமிப்பு கணக்கு பாஸ்புக் அல்லது வங்கிக் கணக்கு அறிக்கை இருப்பிட சான்று (தொலைபேசி/ மின்சாரம்/ தண்ணீர்/தொலைபேசி கட்டணம்/வீடு பதிவு ஆவணம்), ரேஷன் கார்டு பஞ்சாயத்து பிரதானால் அங்கீகரிக்கப்பட்ட பிபிஎல் சான்றிதழ் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கட்டாயம் தேவைப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
* முதலில் https://www.pmuy.gov.in/index.aspx என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
* "Apply for New Ujjwala 2.0 Connection" என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
* Indane, Bharatgas, Hindustan Petroleum ஆகிய நிறுவனங்களில் ஏதேனும் ஒரு சிலிண்டர் சேவையை தேர்வு செய்ய வேண்டும்.
* தேவைப்படும் சேவையில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
* பெயர், முகவரி, ஆதார் எண் உள்ளிட்ட என அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, அடையாள ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.