குட் நியூஸ்...! இதற்கான மதிப்பீட்டுக் கட்டணம் முற்றிலுமாக ரத்து...! மத்திய அரசு அறிவிப்பு...!
எளிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ் திட்டத்தின் கீழ் மேலும் 37 தயாரிப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய தொலைத் தொடர்பு துறை தனது செய்தி குறிப்பில்; தொலைத்தொடர்புத் துறையின் தொழில்நுட்பப் பிரிவான தொலைத்தொடர்பு பொறியியல் மையம் 01 ஜனவரி 2024 முதல் எளிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ் திட்டத்தின் கீழ் மேலும் 37 தயாரிப்புகளைக் கொண்டு வந்துள்ளது . இது சான்றிதழ் பெறுவதற்கான காலத்தை எட்டு வாரங்களிலிருந்து இரண்டு வாரங்களாகக் குறைக்கும்.
மேலும் வணிகத்தை எளிதாக்குவதை ஊக்குவிக்கும். ஐபி பாதுகாப்பு உபகரணங்கள், ஐபி முனையங்கள், கண்ணாடி இழை அல்லது கேபிள், டிரான்ஸ்மிஷன் டெர்மினல் உபகரணங்கள் போன்ற தயாரிப்புகள் பன்னிரண்டிலிருந்து நாற்பத்தி ஒன்பது ஆக அதிகரித்துள்ளன. சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களுக்கு நிர்வாகக் கட்டணம் மட்டுமே 01 ஜனவரி 2024 முதல் வசூலிக்கப்படும்.
மதிப்பீட்டுக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அசல் உபகரண உற்பத்தியாளர் அல்லது விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாகும். ஏனெனில் இது விண்ணப்பக் கட்டணத்தை 80 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்கிறது.