அன்லிமிடெட் கால்.. தினமும் 2 ஜிபி டேட்டா.. 100 ரூபாய்க்குள் அசத்தல் திட்டங்களை வழங்கும் BSNL..
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தி வரும் நிலையில், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அதுவும் வெறும் 100 ரூபாய்க்குள் பல திட்டங்களை BSNL வழங்கி வருகிறது. BSNL-ன் டாப் 5 மலிவான ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
BSNL ரூ 97 திட்டம்: BSNL-ன் இந்த ரூ.97 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 15 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் மொத்தம் 30ஜிபி கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் உள்ளூர்/எஸ்டிடி/ரோமிங் வாய்ஸ் கால் சலுகை உள்ளது. அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறையும் என்பதை பயனர்கள் கவனிக்க வேண்டும்.
BSNL ரூ 98 திட்டம்: BSNL-ன் ரூ.98 திட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. 18 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறைகிறது.
BSNL ரூ.58 திட்டம்: BSNL-ன் ரூ.58 என்ற விலைக்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும். 7 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறைகிறது.
BSNL ரூ 94 திட்டம்: BSNL-ன் ரூ.94 திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு 200 நிமிடங்கள் கிடைக்கும்..
BSNL ரூ 87 திட்டம்: BSNL-ன் ரூ.87 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை பெறலாம். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 14 நாட்கள். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் கால் வசதி கிடைக்கும். தினசரி அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறைகிறது. இந்த திட்டம் ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவையையும் வழங்குகிறது.
Read More : Bussiness idea | குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஊறுகாய் பிசினஸ்.. இனி நீங்களும் லட்சாதிபதி தான்..!!