சென்னையில் நாளை முதல் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்..!!
நாளை முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே குறிப்பிட்ட நாட்கள் மட்டும் 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும், கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலும் இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களுக்கு பதிலாக இயக்கப்படும் சிறப்பு மின்சார ரயில்களின் கால அட்டவணை
சென்னை கடற்கரை - பல்லாவரம்
நேரம் 09:30, 09:50, 10:10, 10:30, 10:50, 11:10, 11:30, 11:50, ល់ 12:10, 12:30, 12:50 மற்றும் இரவு 10:40, 11:05, 11:30, 11:59 மணி.
பல்லாவரம் - சென்னை கடற்கரை
10:20, 10:40, 11:00, 11:20, 11:40, ល់ 12:00, 12:20, 12:40, 01:20, 01:40, 2 11:30, 11:55, 12:20, 12:45 மணி.
கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு
10:45, 11:10, ល់ 12:00, 12:50, மதியம் 01:35, 01:55 மற்றும் இரவு 11:55 மணி.
செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி
காலை 10:00, 10:30, 11:00, 11:45, நண்பகல் 12:30, மதியம் 01:00 மற்றும் இரவு 11:00 மணி.
அதிகாலை முதல் காலை 09:20 மணி வரையும், மதியம் 01:00 மணியிலிருந்து இரவு 10:20 வரையும் வழக்கம்போல் அட்டவணைப்படி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; “இந்திய மக்கள் வறுமையில் இல்லை..!!” – பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன்