For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை...! வானிலை மையம் எச்சரிக்கை..!

According to the Meteorological Department, there is a chance of rain in Tamil Nadu till the 25th.
07:01 AM Jun 20, 2024 IST | Vignesh
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை     வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 22-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனிமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

மேலும் 23-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல்மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 24, 25-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி,மின்னலுடன் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 21 முதல் 23-ம் தேதி வரையும் அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement