முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன சூப்பர் நியூஸ்..!!

04:53 PM Apr 15, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் நேற்றைய தினத்தை பொறுத்த வரையிலும் ஓரிரு இடங்களில் மழை பொழிந்தது என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் 3 சென்டிமீட்டர் அளவு மழை பெய்தது. மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை தமிழகம் தென் மாவட்டங்களில் லேசான மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு காற்றின் ஈரப்பதம் குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் மக்கள் அசவுகரிய நிலையை சந்திக்கலாம். மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

Read More : அடடே..!! இது உங்களுக்கு தெரியுமா..? வெறும் ரூ.150 இருந்தால் விமானத்தில் பயணிக்கலாம்..!!

Advertisement
Next Article