For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டெலிவரி பாய் ரூபத்தில் வந்த எமன்!! பக்கா பிளானுடன் வந்த ரவுடிகள்!! - நடந்தது என்ன?

A mysterious mob, disguised as food delivery men, slashed Armstrong. In this, Armstrong collapsed in a pool of blood at the scene.
01:32 PM Jul 07, 2024 IST | Mari Thangam
டெலிவரி பாய் ரூபத்தில் வந்த எமன்    பக்கா பிளானுடன் வந்த ரவுடிகள்     நடந்தது என்ன
Advertisement

சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பல ஆண்டுகளாக இருக்கும் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்திற்கு முதல் நாள் இரவு அவரது வீட்டருகே ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அவரை சூழ்ந்து வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்தார். தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தன்று இரவு, உணவு டெலிவரி ஊழியர்கள் போல் 4 பேர் வந்துள்ளனர். அதில் இருவர் ஒரு புறமும், மற்ற இருவர் இன்னொரு வழியிலும் நின்றுக் கொண்டனர். இந்த இருவரின் குறி தப்பி அவர் எப்படியும் எதிரே இருக்கும் வழியாக ஓடுவார், அப்படி வந்தால் மற்ற 2 பேர் அவரது உயிரை எடுப்பது என ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தனர். அதன்படி ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்ட அவர்கள், திடீரென இருவர் மட்டும் போய் அவரிடம் ஏதோ பேச்சுக் கொடுத்துள்ளனர்.

அவர்களை கண்டு சந்தேகமடைந்த ஆம்ஸ்ராங்,"ஏய் ஏய்" என அழைத்துள்ளார். அதற்குள் அந்த இருவரும் அவரது கவனத்தை திசை திருப்ப யாரோ பின்னால் இருப்பது போல் "அண்ணா அண்ணா" என எச்சரிக்கை செய்து போல் நடித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கும் திரும்பி பார்த்த போது உடனே அவரது காலில் 4 இடங்களில் வெட்டிவிட்டனர். இதனால் ஓடாமல் அவர் அதே இடத்திலேயே நின்றிருந்தார். இதை அடுத்து கழுத்தில் வெட்டிய போது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் ஆகியவை துண்டானது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு கராத்தே தெரியும் என்பதால் அவர் வெட்டும் போது தடுத்தால் நாட்டு வெடிகுண்டை வீசி விடலாம் என கருதி அதையும் அந்த கொலையாளிகள் கொண்டு வந்தனர்.

Tags :
Advertisement