’அலுவலகம் சென்றவர்கள் பாத்து வாங்க’..!! ’இன்னும் சில மணி நேரங்களில் சம்பவம் இருக்கு’..!! வானிலை ஆய்வு மையம்..!!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் மலாக்கா பகுதிகளில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29இல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் வலுப்பெற்று டிசம்பர் 1ஆம் தேதி புயலாக மாறவுள்ளது.
மேலும் கிழக்கு காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கனமழை, கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, திருச்சி ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.