'இனி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இது நடக்கும்'..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தினை தொடங்கியிருக்கிறார். அனைவரும் இதற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்து கொண்டிருக்கின்றனர். முதல்வரும் மத்திய அரசிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், நீட் விலக்கு குறித்தான அவசியம் குறித்து எடுத்துரைத்து வருகிறார்.
மழைக்காலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஒரே நாளில் 1000 இடங்களில் நடத்தப்படும் என்று அறிவித்து, 2000-க்கும் மேற்பட்ட முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அக்டோபர் 29ஆம் தேதி மட்டும், 1,943 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,04,876 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 335 பேருக்கு காய்ச்சல், 254 பேருக்கு இருமல் மற்றும் சளி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல, நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம்கள் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவத் துறை செயலாளரிடமும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரிடமும் ஆலோசிக்கப்பட்டு, இனிமேல் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.