சித்த வைத்திய முறையில் இந்த பிரச்சனையை சரிசெய்யலாம்..!! தினமும் காலை, மாலை மட்டும் இதை குடிச்சி பாருங்க..!!
நாம் தினசரி உடலுக்கு தேவையான நீரை அருந்தாமல் விட்டுவிட்டால், நமது உடலில் வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் சமநிலையில் இருக்காது. அவ்வாறு நம் உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், பித்தம் அதிகரித்து விடும். அதுமட்டுமின்றி மது அருந்துதல், புகைப்பிடித்தல் இவ்வாறான பழக்கங்களும் பித்தத்தை உண்டாக்கும்.
பித்தம் அதிகரித்து விட்டால் செரிமான பிரச்சனையில் கோளாறு ஏற்படும். அத்தோடு தலைசுற்றல் போன்றவற்றையும் ஏற்படும். இதில் இருந்து முழுமையாக விடுபட சித்த வைத்திய முறையை பின்பற்றலாம்.
சித்த வைத்திய முறையில் பித்தத்தை நீக்குவது எப்படி..?
* கொத்தமல்லி
* மிளகு
* லவங்கப்பட்டை
* சுக்கு
* கற்கண்டு
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக 30 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
* இதில் கொடுத்துள்ள கற்கண்டை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* இதனை தவிர்த்து இதர பொருட்களை தனியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அரைத்து வைத்துள்ள கற்கண்டை தனியாக சலித்து எடுத்துக் கொண்டு இதனுடன் கலந்து கொள்ளலாம்.
* தினசரி காலை மற்றும் இரவு என்று இரு வேலையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து இதை குடிக்க வேண்டும்.
இவ்வாறு குடித்து வர பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நிவர்த்தி ஆகும் என கூறப்படுகிறது.