முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த ஒரு பெயிண்ட் போதும்..!! இனி வீட்டிற்கு மின்சாரமே தேவையில்லை..? அடடே சூப்பர் கண்டுபிடிப்பு..!!

Currently, an energy-saving paint called 'solar paint' is going viral.
05:30 AM Oct 05, 2024 IST | Chella
Advertisement

நிலக்கரி மற்றும் தண்ணீர் மூலமாக கிடைக்கும் மின்சாரம் ஆனது நிரந்தர தன்மையற்றது. எனவே, இதற்கு மாற்று ஆற்றலைத் தேடி விஞ்ஞானிகள் முதல் சாமானியர்கள் வரை நகர்ந்து வருகின்றனர். மின்சாரத்திற்கான மாற்று சக்தியைப் பொறுத்தவரை சோலார் மற்றும் காற்றாலை மூலமாக மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சோலார் பேனல்களைக் கொண்டு வீடுகள் முதல் தொழிற்சாலைகள் வரை தங்களது பயன்பாட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை அவர்களாகவே தயாரித்துக் கொள்கின்றனர். அந்த வகையில், தற்போது ‘சோலார் பெயிண்ட்’ எனப்படும் மின்சக்தியை சேமிக்கக்கூடிய வண்ணப்பூச்சு வைரலாகி வருகிறது.

Advertisement

நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் சோலார் பெயிண்ட்கள் குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனிடையே, மக்கள் தங்களது சொந்த தேவைக்கான மின்சாரத்தை தயாரிப்பதற்காக வீட்டின் கூரைகள் மற்றும் சுவர்களில் சோலார் பெயிண்ட்டை பூசி வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலியாவின் ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஆர்எம்ஐடி) விஞ்ஞானிகள் மின்சாரம் தயாரிக்கக்கூடிய சோலார் பெயிண்ட்டை கண்டுபிடித்துள்ளனர். இந்த பெயிண்டானது சூரியனின் கதிர்கள் தாக்கும் போது, சுற்றியுள்ள ஒளி மற்றும் ஈரப்பதத்தை மின்சக்தியாக மாற்றுகிறது. அதன் பின்னர் பெயிண்டில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஆற்றலானது, அறையில் உள்ள சாதனங்களுக்கு மின்சாரம் வழங்க பயன்படுகிறது.

ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த அற்புதமான பெயிண்ட் இன்னும் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படவில்லை. இருப்பினும், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் மலிவான விலையில் விற்க திட்டமிட்டு வருகிறது. இந்த பெயிண்ட்டை அலுவலகம், வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், கார் கூரைகள், சாலைகள் என எங்கு வேண்டுமானாலும் பூசிக் கொள்ளலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவைப் போலவே, கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒளி-உணர்திறன் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தி திரவ நிலையிலான ஸ்ப்ரே-ஆன் சோலார் பெயிண்ட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உலக மக்கள் அனைவரும் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை பெற மிகவும் எளிமையான மற்றும் மலிவான முறையை விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். இதேபோல் அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சூரியனின் வெப்பத்தில் இருந்து வீட்டை பாதுக்கக்கூடிய வகையிலான பெயிண்ட் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பெயிண்ட்டை சுவர்கள் மற்றும் கூரைகள் மீது பூசுவதன் மூலமாக வெப்பநிலையை 7 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். கூல் ரூஃப் டிரெண்டுக்கு ஏற்ற வகையில், பெயிண்ட் உற்பத்தி மாற்றம் அடைந்து வரும் நிலையில், அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Read More : ”நான் சீக்கிரம் உடல் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி”..!! நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை..!!

Tags :
சோலார் பெயிண்ட்பெயிண்ட்மின்சக்தி சேமிப்புமின்சாரம்
Advertisement
Next Article