For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த ஒரு பானம் போதும்..!! சிறுநீரக கற்களை அசால்ட்டாக வெளியேற்றிவிடும்..!!

05:10 AM May 14, 2024 IST | Chella
இந்த ஒரு பானம் போதும்     சிறுநீரக கற்களை அசால்ட்டாக வெளியேற்றிவிடும்
Advertisement

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், அவை பக்கவிளைவை ஏற்படுத்தக் கூடியவை. ஆனால், பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், அதில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும்.

Advertisement

சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சையின்றி இயற்கை முறையில் அடித்து வெளியேற்றும். இந்த ஒரு பானத்தை 4 நாட்கள் பயன்படுத்தி வந்தால், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் வலியின்றி வெளியேறிவிடும். சிறுநீரக கற்கள் வெளியேறும்போது, உடல் தளர்ச்சி, உடல் சோர்வு ஏற்படும். இதை பருகும்போது, இவை எதுவும் இல்லாமல், சிறுநீரகக் கற்கள் இயற்கையான முறையில் வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்

மிளகு – 9

எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 1

தேன் – 4 ஸ்பூன்

தண்ணீர் – ஒரு டம்ளர்

செய்முறை

* மிளகு மற்றும் சின்ன வெங்காயத்தை உரலில் இடித்துக்கொள்ள வேணடும்.

* ஒரு டம்ளர் தண்ணீரில், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் இடித்து வைத்த அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* உங்களுக்கு தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு அதிகம் அல்லது குறைத்து சேர்த்துக் கொள்ளலாம். ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் போதுமான அளவு. சோர்வு அதிகமாக உணர்ந்தால் அதிகளவு எலுமிச்சை சேர்த்துக்கொள்ளலாம்.

* அனைத்தையும் நன்றாக கலந்து, பல் துலக்கிவிட்டு, இந்த பானத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரை மணி நேரம் பருக வேண்டும்.

* இதை பருகிய பின் 2 மணி நேரத்திற்கு வேறு எந்த உணவோ அல்லது தேநீர், காபியோ எடுத்துக்கொள்ளக்கூடாது.

* ஒரு லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும். அப்போதுதான் சிறுநீர் பெருகி கற்கள் அடித்துக்கொண்டு வெளியேறும்.

* இதை 5 முதல் 10 நாட்கள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். கல்லின் அளவு சிறியது என்றால் 2 நாளிலே வெளியேறிவிடும். கல்லின் அளவுக்கு ஏற்றாற்போல் நாட்களை அதிகரிக்க வேண்டும்.

* இதை பருகுவதற்கு முன் உங்கள் கல்லின் அளவை ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

* உடல் சோர்வின்றி, வலியும் இன்றி, உயிர்ச்சத்துக்களை குறைக்காமல் சிறுநீரக கற்களை வெளியேற்ற முடியும். எளிமையான இந்த டிப்ஸ் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

Read More : ஏசியை ஆஃப் செய்யும்போது இந்த விஷயத்தை மட்டும் பண்ணாதீங்க..!! கரண்ட் பில் எகிறிடும்..!!

Advertisement