முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Isreal: போருக்கு பின் காஸாவின் நிலை இப்படிதான் இருக்கும்!… பிரதமர் அலுவலகம் தகவல்!

01:15 PM Feb 24, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Isreal: போருக்கு பிறகு ராணுவம் விலக்கப்பட்ட காசா முனையின் பாதுகாப்பு இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

ஹமாஸ் உடனான போர் நிறைவுற்ற பிந்தைய திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதே விவரங்கள் அந்நாட்டு அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அறிக்கையில் போருக்கு பிறகு, காசாவை நிர்வகிப்பதில் இஸ்ரேல் பங்கு குறித்த திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி போர் நிறைவுற்று, ராணுவம் விலக்கப்பட்ட காசா முனையின் பாதுகாப்பு இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வகையில், காசா முழுக்க இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்படும். காசாவிற்குள் பாதுகாப்பு மண்டலத்தை நிறுவப்படும். இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கலாம். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள், அமைப்புகளுடன் தொடர்பில் இல்லாத மற்றும் அவர்களிடம் நிதியுதவி பெறாத உள்ளூர் அதிகாரிகளால் காசா நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore:Baltic Sea: கடலுக்கு அடியில் ராட்சத அதிசயம்..! 11,000 ஆண்டுகள் பழமையானது..! விஞ்ஞானிகள் ஆச்சரியம்!

Tags :
Netanyahuகாஸாவின் நிலைபிரதமர் அலுவலகம் தகவல்போருக்கு பின்
Advertisement
Next Article