For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'வானில் திடீரென நடந்த அதிசயம்' அடேங்கப்பா.. இவ்வளவு வெளிச்சமா?

05:25 PM May 19, 2024 IST | Mari Thangam
 வானில் திடீரென நடந்த அதிசயம்  அடேங்கப்பா   இவ்வளவு வெளிச்சமா
Advertisement

இரவு வானில் நீல நிற விண்கல் ஒன்று பறந்து சென்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

போர்ச்சுகல் நாட்டில் உள்ள பின்ஹெய்ரோ அருகே இசைக்குழுவினரின் நிகழ்ச்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அந்த சமயத்தில் விண்கல் விழுந்தது. அந்த காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். இதே போன்று, அவேரஸ் டி சிமா அருகே நெடுஞ்சாலையில் காரில் ஒருவர் சென்ற போது, நீல நிறத்தில் எரிந்தவாறு வானத்தில் இருந்து பூமியை நோக்கிச் சென்றது. அப்படி நெருங்கி சென்றதால் இரவு நேரத்தில் சூரிய வெளிச்சம் வந்ததை போல அந்த இடம் பகல் போல மாறியது.

ஒரு சமூக வலைதள பதிவர் வெளியிட்ட பதிவில், “உண்மையற்றது!! போர்ச்சுகல் மீது பெரிய விண்கல் ஒளி! இப்படி ஒரு ஒளியை பார்ப்பது வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு! இது பூமியைத் தாக்கிய விண்கல்லாக மாறியதா என்பது குறித்து தெரியவில்லை. நூற்றுக்கணக்கான மைல்களுக்கு தெரிந்தது. ஆஹா!” என வியப்பின் உச்சத்துக்கே சென்று பதிவிட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான கி.மீ. வரை இரவு நேர வானில் நீல நிற ஒளி பிரவாகம் பாய்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், இது பூமியின் மேற்பரப்பைத் தாக்கியதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இது போர்ச்சுகலின் காஸ்ட்ரோ டெய்ர் நகருக்கு அருகில் விழுந்திருக்கலாம் எனவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கூறுகையில், "விண்கற்கள் அல்லது விண்வெளிப் பாறைகள் என்பது விண்வெளியில் உள்ள பொருட்களாகும். அவை தூசிகள் முதல் சிறிய சிறுகோள்கள் வரை இருக்கும். இவை அதிக வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது தீப்பற்றி எரிவதால் விண்கற்கள் என அழைக்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளது.

‘என் உதடு என் இஷ்டம்’ – உதட்டு சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த நடிகை!

Advertisement