முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்தியாவின் மிகவும் மர்மமான கோயில் இதுதான்.. ஆனாலும் குவியும் பக்தர்கள்.. என்ன காரணம் தெரியுமா..?

This temple in Rajasthan is known as the most terrifying temple in India.
09:08 AM Jan 11, 2025 IST | Rupa
Advertisement

நாம் அனைவரும் சிறு வயதில் இருந்து பல திகில் கதைகளைக் கேட்டிருப்போம்.. பேய்கள், மந்திரவாதிகள் அல்லது தீய சக்திகள் பற்றி பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் இந்தியாவில் மிகவும் மர்மமான மற்றும் சக்திவாய்ந்த கோயிலாக கருதப்படும் கோயில் எது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

ராஜஸ்தானில் உள்ள இந்தக் கோயில் இந்தியாவில் மிகவும் பயமுறுத்தும் கோயிலாக அறியப்படுகிறது. மெஹந்திபூர் பாலாஜி கோயில் இந்தியாவின் பெரும்பாலான கோயில்களைப் போலல்லாமல் மிகவும் மர்மமான கோயிலாக கருதப்படுகிறது. இந்த இடம் பலவீனமானவர்களுக்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது.

சிலர் இந்த கோயில் மக்களை ஈர்க்கும் ஒரு காந்த ஈர்ப்பு என்று கூறுகின்றனர். இந்த பழங்கால கோயில், அதன் தனித்துவமான சடங்குகளுக்கு மட்டுமல்ல, பக்தர்களை ஈர்க்கும் சக்திக்காகவும் அறியப்படுகிறது. ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்த கோயில் இந்தியாவின் மிகவும் மர்மமான மற்றும் சக்திவாய்ந்த கோயில்களில் ஒன்றாக உள்ளது.

இந்த கோயில் ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தீய சக்திகள், சூனியம் மற்றும் விவரிக்க முடியாத நோய்களால் துன்புறுத்தப்படுபவர்கள் இந்த கோயிலுக்கு சென்றால் இதிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.

தங்கள் நோய்களில் இருந்து குணமடையவே மெஹந்திபூர் பாலாஜி பக்தர்கள் தேடி வருகிறார்கள். இந்தக் கோயில் தெய்வீக சக்தியைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்கு சென்றால் வாழ்க்கையின் பிரச்சனைகள், நோய்கள் என அனைத்து சிக்கல்களும் தீரும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

குறிப்பாக மெஹந்திபூர் பாலாஜி கோயில் பேய் விரட்டுதலுக்கு பெயர் பெற்றது.. இந்த கோயிலில் பக்தர்களுக்கு "ஜாதுய் சிகிச்சை" அல்லது "தெய்வீக சிகிச்சை" என்று சிகிச்சை வழங்கப்படுகிறது. இது தீய ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

பகவான் விஷ்ணு, தனது ஹனுமான் அவதாரத்தில், தீய சக்திகளிடமிருந்து தனது பக்தர்களை தனிப்பட்ட முறையில் பாதுகாக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு சென்ற பின்னர், விவரிக்க முடியாத பல மாற்றங்களை அனுபவித்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.

மெஹந்திபூர் பாலாஜி கோயிலுக்கு வருபவர்கள் கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இந்த கோயிலுக்கு செல்வதற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது.. மற்ற கோயில்களைப் போலல்லாமல், பக்தர்கள் பிரசாதத்தை சாப்பிடவோ, வீட்டிற்கு எடுத்துச் செல்லவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்து செல்ல வேண்டும்.- இது கோயிலின் பழக்கவழக்கங்களில் ஆழமாக வேரூன்றிய ஒரு சடங்காகும்.

அர்ஜி, சவாமணி மற்றும் தர்காஸ்ட் போன்ற சடங்குகள் மூலம் தீய சக்திகள் அல்லது பேய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த கோயில் பிரபலமானது. இந்த சடங்குகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள பைரவ் பாபாவின் சிலையை வழிபட்டு விட்டு தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர்.

Read More : மன்னரின் மகனுடன் உறவு.. ஆட்சிக்காக சொந்த குழந்தையை கொன்ற பெண்.. உலகின் இரக்கமற்ற கொடூர பேரரசி..!

Tags :
mehandipur balajimost haunted templerajasthanwiered and latest facts
Advertisement
Next Article