உங்க குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுதா? அப்போ உடனே இதை மாத்துங்க..
மனிதனின் வாழ்வில் மிக முக்கியமானது தண்ணீர் தான். நீன்றி அமையாது உலகு என்பது 100% உண்மை தான். அந்த வகையில், நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான தண்ணீரை எடுத்துச் செல்ல வாட்டர் பாட்டில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால், பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தினால் கேன்சர் ஏற்படும் போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், எந்த பாட்டிலை பயன்படுத்துவது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். தரம் குறைந்த, சுத்தம் இல்லாத வாட்டர் பாட்டில் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் அவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக, தங்களின் குழந்தைகளுக்கு கொடுத்து விடும் பாட்டில் குறித்து பெற்றோர்களுக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும். பிளாஸ்டிக், காப்பர், ஸ்டீல் என ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் நல்லது தீயது என்பதை தாண்டி, அந்த பாட்டில்களின் விலை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், ஒவ்வொரு பாட்டிலின் நன்மை தீமைகளையும் ஆராய்ந்து, எது சரியானது என இந்தப் பதிவின் மூலம் தேர்ந்தெடுப்போம்.
பெரும்பாலும் பலர் பயன்படுத்துவது பிளாஸ்டிக் பாட்டில்கள் தான். ஏனென்றால், இது குறைந்த விலையில் கிடைக்கும். இவை பல்வேறு வித்தியாசமான வடிவங்களில் கிடைப்பதால் குழந்தைகள் இதை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல விரும்புகின்றனர். ஆனால், பிளாஸ்டிக்கின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து இன்றும் பல கேள்விகள் உள்ளது. சில பிளாஸ்டிக்குகள் பிஸ்பெனால் ஏ (BPA) போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடுகின்றது.
இந்த இரசாயனங்களால் உடல் நலத்திற்கு அதிக கேடு ஏற்படும். மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்குவதற்கு நீண்ட காலம் எடுப்பதால் அவை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது. இதனால் நீங்கள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்த்து விட்டு, மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் BPA இல்லாத பிளாஸ்டிக் பாட்டில்களை தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது. தற்போது, ஒரு சில பள்ளிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வர தடை விதித்துள்ளனர்.
ஆயுர்வேதத்தில் முக்கியத்துவம் பெறுவது காப்பர் பாட்டில்கள் தான். தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் திறன், காப்பருக்கு உண்டு. மேலும், காப்பர் நமது உடலில் உள்ள தாமிர சத்து குறைபாட்டை சரிசெய்ய பெரிதும் உதவும். ஆனால், இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், நாம் காப்பர் பாட்டில்களை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லையென்றால், பாட்டிலின் தரம் பாதிக்கப்படும். மேலும், இதன் விலை சற்று அதிகம் என்பதால் எல்லா மக்களாலும் இதை வாங்க முடியாது.
ஆனால் ஸ்டீல் பாட்டில்கள் நீடித்து உழைக்கும். மேலும் எளிதில் துருபிடிக்காமல் தூய்மையானதாகவும் இருக்கும். இந்த பாட்டிலை மற்ற பாத்திரங்களைப் போல் சுலபமாக சுத்தம் செய்யலாம். ஸ்டீல் பாட்டில்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை விட அதிக விலை கொண்டவை, ஆனால் காப்பர் பாட்டில்கள விட விலை குறைவு தான். என்ன தான் பிளாஸ்டிக் பாட்டில்களை விட விலை அதிகமாக இருந்தாலும், இவை நீடித்து உழைக்கும். இதனால் நாம் அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
இறுதியாக, உங்களால் அதிக விலை கொடுத்து பாட்டில் வாங்க முடியாது என்றால், நீங்கள் BPA இல்லாத, மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டிலை வாங்கலாம். உங்களுக்கு சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் ஆயுர்வேத நன்மைகள் வேண்டுமென்றால், நீங்கள் காப்பர் பாட்டிலை தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு சரியாக பராமரிக்க முடியும் என்றால் மட்டும் இதை வாங்குங்கள். நீடித்த உழைப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாட்டில் வேண்டுமென்றால், ஸ்டீல் பாட்டில் சிறந்த தேர்வு.
Read more: கதறி துடித்த குழந்தை; ஆத்திரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்..