பெண்கள் அணியும் சட்டையில் பாக்கெட் வைப்பதில்லை.! ஏன் யோசிச்சிருக்கீங்களா.? காரணம் இதுதான்.!
ஆண்களுக்கு பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஒவ்வொரு துறையிலும் நிரூபித்து வருகின்றனர். சிறு வேலைகளில் இருந்து விண்வெளி ஆராய்ச்சி வரை ஆண்களுக்கு சமமாக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர். இது ஆடை விஷயத்திலும் தொடர்கிறது. ஆண்கள் அணியும் பெரும்பாலான ஆடைகளை பெண்களும் அணிய தொடங்கி விட்டனர். ஆண்கள் அணியும் சட்டைகளில் பெரும்பாலும் பைகள் இருக்கிறது. ஆனால் பெண்கள் அணியும் சட்டைகளில் பைகள் இருப்பதில்லை. இது ஏன் என்று யோசித்து இருக்கிறோமா.? வாருங்கள் இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
17 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு பெண்களும் பாக்கெட் வைத்த சட்டைகளையே அணிந்திருக்கின்றனர். பிரஞ்சு புரட்சிக்கு பிறகு நாகரீக உலகில் ஏற்பட்ட மாற்றம் பெண்களுக்கே பொய் இல்லாத சட்டைகளை கொடுத்திருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரஞ்சு புரட்சிக்கு பிறகு நாகரீக உலகில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில் ஸ்லிம்மர் வடிவ ஆடைகள் மற்றும் கிராஸ் பிட் ஸ்கர்ட்ஸ் ஆடைகள் நாகரீகமாயின. இந்த வகை உடைகளில் பாக்கெட் இல்லை. இதனைப் பெண்கள் விரும்பி அணிய தொடங்கினர். அன்றிலிருந்து பெண்கள் அணியும் சட்டைகளில் பாக்கெட்டில் இல்லாமலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெண்கள் பெரும்பாலும் ஹேண்ட் பேக் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலும் ஆடை வடிவமைப்பு நிறுவனங்களே ஹேண்ட் பேக் போன்றவற்றையும் தயாரிக்கிறது. பெண்களுக்கு சட்டை பாக்கெட் வைத்தால் ஹேண்ட் பேக் விற்பனை குறைந்து விடுமோ என்ற ஐயமும் ஒரு காரணமாக இருக்கிறது. மேலும் பெண்களின் உடலமைப்பு மற்றும் சில அசௌகாரியங்கள் காரணமாக அவர்களுக்கு சட்டைகளில் பாக்கெட் வைப்பதில்லை. இவைதான் பெண்களின் சட்டைகளில் பாக்கெட் இல்லாமல் இருப்பதற்கான காரணங்கள் ஆகும்.