தவெக மாநாடு.. அடுத்தடுத்து மயக்கி விழும் தொண்டர்கள்..!! வானிலை முக்கிய காரணமா? ஆய்வாளர் என்ன சொல்கிறார்..
விஜய்யின் இந்த முதல் அரசியல் மாநாடு சிறிது நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், நேற்று இரவு முதலே விஜய்யின் ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் குவியத் தொடங்கினர். மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளதால் அதற்காக இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
மேடையின் அருகில் இருந்து விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நாற்காலிகளை பிடித்து அமர்ந்துள்ளனர். மாநாட்டுத் திடல் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருப்பதால் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயில் வாட்டி வதைத்து வருவதால் மாநாட்டைப் பார்க்க வந்த பலருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 80க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் கூறுகையில் மாநாடு நடைபெறும் இடத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும் காசு வறண்டு காணப்படுகிறது. இதனால் உடலின் வெப்பநிலை மேலும் அதிகரித்து பலருக்கு மயக்கம் ஏற்படுகிறது.
இன்றைய தினம் மாநாடு நடைபெறும் இடத்தில் மழை வராது. இந்த வெயில் 4 மணி வரை இருக்கும். அதன் பிறகு பனிப்பொழிவு தொடங்கி மாநாட்டில் இயல்பான சூழல் நிலவும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பூவுலக நண்பர்கள் இயக்கத்தின் சுந்தரராஜன் கூறியிருப்பதாவது: இன்றைய தினம் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டியில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கிறது. ஒரு வெட்ட வெளியில் லட்சக்கணக்கானோர் கூடும் போது இயல்பாகவே ஒவ்வொருவரின் வெப்பநிலையும் 2 அல்லது 3 டிகிரி சென்டிகிரேட் அதிகரிக்கும் என்கிறார்கள்.
எனவே இது போன்ற அரசியல் மாநாடுகளை மாலை அல்லது இரவு நேரத்தில் வைத்துக் கொண்டால் யாருக்கும் இது போன்ற பாதிப்புகள் வராது. இல்லாவிட்டால் எத்தனை பேர் வருவார்கள் என்பதை கணித்து தண்ணீர் இருப்பை அதிகரித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஷாமியானா பந்தலையாவது போட்டிருக்கலாம். மேலும் தற்போது மாநாட்டில் பல இடங்களில் தண்ணீர் தெளித்துவிட்டாலும் மயங்கி விழுவது இல்லாமல் இருக்கும் என்கிறார்கள்.
த.வெ.க. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை வழங்குவதற்காக ஏராளமான ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன் அவசரப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
Read more ; உண்மை ஒரு நாள் வெல்லும்.. கடந்த 37 நாட்கள் என்றும் என் இதயத்தை துளைக்கும்..!! – ஜானி மாஸ்டர் பதிவு