நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படும் செவ்வரளி செடிகள்.! இவற்றின் பிண்ணனி தெரியுமா.?
நெடுஞ்சாலைகள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நான்கு வழி சாலைகளின் மூலம் போக்குவரத்து எளிமையாக்கப்பட்டு இருப்பதோடு நாம் சென்றடைய கூடிய இடத்தை விரைவாக அடைவதற்கும் உதவுகின்றன. மேலும் நெடுஞ்சாலைகளின் உதவியால் காய்கறிகள் மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களும் விரைவாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடிகிறது.
நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு விதமான நடவடிக்கைகளும் நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் வருகின்றன. மேலும் நெடுஞ்சாலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டு இருக்கும் தடுப்புகளில் செவ்வரளி செடிகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த செடிகள் வெறும் அழகிற்காக மட்டும் வைக்கப்பட்டவை அல்ல. அவற்றின் பின்னணியில் சாலை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் இருக்கின்றன. அவை என்ன என்று பார்ப்போம்.
பொதுவாகவே சாலைகளில் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக வாகனங்களில் இருந்து அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகும். சாலையின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் செவ்வரளி செடிகள் இந்த கார்பன்டை ஆக்சைடு வாயுவை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படுகிறது மற்ற செடிகளை விட செவ்வரளி செடிகள் அதிக கார்பன் டை ஆக்சைடு வாயுவை உள்வாங்கிக் கொள்வதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தச் செடிகள் நெடுஞ்சாலைகளின் நடுவே வைக்கப்பட்டிருப்பதால் வாகனங்களில் இருந்து வெளிப்படும் விளக்குகளின் ஒளி எதிரில் வரும் வாகனங்களின் மீது பட்டு விபத்து ஏற்படுவதையும் தடுக்கிறது. இந்தச் செடிகள் வறண்ட நில தாவரம் என்பதால் நீர் ஊற்ற வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் இந்தச் செடிகளை ஆடு மாடுகளும் சாப்பிடாது. இந்தச் செடிகள் மண்ணரிப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. இது போன்ற காரணங்களால் தான் செவ்வரளி செடிகள் நெடுஞ்சாலைகளில் நடப்பட்டு இருக்கிறது.