தொப்பை போடுவதற்கு இதுதான் காரணம்!… அண்ணாந்து தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு பிரச்சனையா?
தண்ணீர் மிகக் குறைவாக குடிப்பது எவ்வளவு பாதிப்பைத் தருமோ அதே அளவிற்கு தண்ணீரை சரியான முறையில் குடிக்காமல் போனாலும் பாதகங்கள் உண்டாகும். ஏனெனில் தண்ணீரை சரியான முறையில் குடிக்காதபோது, நீங்கள் எவ்வளவு அதிகமாக குடித்தாலும் அவை முழுமையும் நம் உடலில் சென்று சேராது. அதனால் அதிகமாக தண்ணீர் குடித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை ஆகவே ஆயுர்வேதம் சொல்லும் தண்ணீர் பிடிக்கும் எளிய சரியான வழிமுறைகளை தெரிந்து கொண்ட இனியாவது தண்ணீரை சரியாக குடிக்கும் பழகுங்கள்.
நம்மில் நிறைய பேருக்கு இந்த பழக்கமே கிடையாது. நின்று கொண்டு அண்ணாந்து பார்த்து கடகடகடவென தண்ணீரைக் குடித்து முடித்து விடுவோம். அ்போதுதான் சிரலுக்கு தாகமே அடங்கும். ஆனால் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது மிக மிக மோசமான செயல். நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு மிக எளிதாக எலும்பு மூட்டுகளில் வலி ஏற்படும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது தண்ணீர் உடலின் எல்லா பகுதிகளுக்கும் சரியாக சென்று சேராமல் எலும்பு மூட்டுகளுக்கு இடையில் தேங்கிவிடும். இதனால் மூட்டுகளுக்கு இடையே நீர் கோர்வை அதிகரித்து மூட்டு வலி மற்றும் ஆர்த்தரைட்டிஸ் பிரச்சனையை உருவாக்கக்கூடும்.
நாம் நிறைய பேர் செய்யும் தவறு இதுதான். தண்ணீரை அண்ணாந்து மிக வேகமாக குடித்து விடுவோம். ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் குறைந்தது அரை டம்ளர் அளவிற்கு உள்ளே போகும் அளவுக்கு குடிப்போம். ஆனால் அப்படி குடிப்பது மிக தவறு. தண்ணீரை எப்போதும் வாய் வைத்து சிப் செய்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குடிக்க வேண்டும். அண்ணாந்து தண்ணீர் குடிக்கும்போது தண்ணீருடன் சேர்ந்து காற்றும் நம் வயிற்றுக்குள் செல்லும். இதன் காரணமாக நமக்கு தொப்பை போடும். அண்ணாந்து கடகடவென குடிக்கும்போது தண்ணீர் நேரடியாக வயிற்றுப் பகுதியை நோக்கி செல்லும். அதனால் அழுத்தம் ஏற்படும். குறிப்பாக வயிறு வீக்கம், வயிறு உப்புசம் பிரச்சனை அதிகமாக இருக்கும். சிலருக்கு சாப்பிட்டால் மட்டுமின்றி, தண்ணீர் குடித்தால் கூட வயிறு உப்பசம் வந்துவிடும். இதற்கு காரணம் தண்ணீரை கடகடவென குறிப்பதுதான். இதுவே மெதுவாக குடிக்கும்போது அது ஜீரண ஆற்றலை அதிகரிக்க உதவி செய்யும்.