முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'நாள் முழுவதும் உழைத்தாலும் வெறும் 50 ரூபாய் தான் சம்பளம்...!!' எந்த நாடு தெரியுமா?

05:39 PM May 28, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்த நாட்டில் மக்கள் வாழும் சூழலைப் பார்த்தால் வறுமை எவ்வளவு கொடியது என்பதை அறிந்துகொள்ள முடியும். நாள் முழுவதும் உழைத்தாலும் வெறும் 50 ரூபாய் தான் சம்பளம்.

Advertisement

தொழில்நுட்ப வளர்ச்சி, செல்வச்செழிப்பு, வானுயர்ந்த கட்டடங்கள் சொகுசு வீடு வாசல் என செல்வந்தர்களாக மக்கள் வாழ்ந்து வருகையிலே, ஒரு வேளை உணவு கூட இல்லாமல் கஷ்டப்படும் வறுமை நிறைந்த நாடுகளும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறது.  அந்த வரிசையில் உலகின் மிக ஏழ்மையான நாடாக புருண்டி என்ற நாடு கண்டறியப்பட்டுள்ளது. இந்நாட்டில் மக்கள் வாழும் சூழலைப் பார்த்தால் வறுமை எவ்வளவு கொடியது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

கடந்த காலத்தில் பிரிட்டனும் அமெரிக்காவும் இந்த நாட்டை ஆண்டன. இந்த நாடு சுதந்திரம் அடைந்த போது, ​​பொருளாதார நிலை நன்றாக இருந்தது, ஆனால் 1996 ஆம் ஆண்டு முதல் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. புருண்டியில் 1996 முதல் 2005 வரை நடந்த பெரும் இனக்கலவரம் லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்றது. அதோடு அந்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியது. மெல்ல மெல்ல இந்த நாடு பொருளாதாரத்தில் பின்தங்கி உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது.

உலகின் ஏழை நாடுகளின் பட்டியலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள புருண்டி முதலிடம் வகிக்கிறது. இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 12 மில்லியன் அதாவது 1 கோடியே 20 லட்சம். இதில் 85 சதவீத மக்கள் மிக கடுமையான வறுமையில் வாடுகின்றனர். இந்த நாட்டில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. ஒருபுறம், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களை உலகம் தேடுகிறது. அதே வேளையில், பூமியில் இந்த நாட்டில் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற நிலையே உள்ளது.

புருண்டியைத் தவிர, மடகாஸ்கர், சோமாலியா மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு உள்ளிட்ட பல நாடுகள் வறுமையுடன் போராடி வருகின்றன. புருண்டி மக்களின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 180 டாலர்கள், அதாவது ஆண்டுக்கு 14 ஆயிரம் ரூபாய் தான். இங்கு 3 பேரில் ஒருவர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர். மேலும் ஒருவர் நாள் முழுவதும் உழைத்தாலும், தினமும் 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலை உள்ளது.

Read more ;’இப்படியே போன இனி வீடு வாங்க முடியாது போலயே’..!! விலை தாறுமாறாக உயர்வு..!!

Tags :
burundiday's salary is just 50 rupeespoorest countrypoorest country in the world
Advertisement
Next Article