முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Gold | தங்கத்தின் மீது இப்படி முதலீடு செய்து பாருங்கள்..!! பண மழை கொட்டும்..!!

05:30 AM May 22, 2024 IST | Chella
Advertisement

Gold | கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து, குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். CNBC-இல் நடைபெற்ற உரையாடலில் பங்கேற்ற விக்னஹர்டா கோல்டு நிறுவனத்தின் தலைவர் மகேந்திர லூனியா, 2030ஆம் ஆண்டிற்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.68 லட்சத்தை எட்டும் என்று கூறியுள்ளார். அப்படியானால், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16,800 ஆக இருக்கும்.

Advertisement

தங்கத்தின் இந்த கடும் விலை உயர்வுக்கு சர்வதேச அரசியலில் நிலவும் பிரச்சனைகள் முதல் உலகப் பொருளாதார மந்தநிலை வரை காரணமாக உள்ளது. மேலும், பண வீக்கம், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம் என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பங்குச்சந்தை கணிக்க முடியாததாக உள்ளதால், தங்கம் விலை குறையும் என எதிர்ப்பார்க்க முடியாது. மாறாக தங்கத்தின் விலை உயர்வை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவற்றில் முதலீடு செய்வது நல்ல தேர்வாக இருக்கும்.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் ஆபரணத் தங்கத்தில் முதலீடு செய்வதை விட தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும். ஆண்டுக்கு பலமுறை மத்திய அரசு தங்கப் பத்திரங்களை ஏலம் விடும். அதில், நீங்கள் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். இதுவே, அறக்கட்டளைக்கு வாங்க விரும்பினால் 20 கிலோ கிராம்கள் வரை வாங்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More : Heart Attack | ஒருசில நிமிட கோபத்தால் கூட மாரடைப்பு வரும்..!! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்..!!

Advertisement
Next Article