வெங்காயம்- பூண்டு தோலை சட்டென்று, சுலபமாக உரிக்க வேண்டுமா?? இதை மட்டும் செய்தால் போதும்..
அவசரமான காலை நேரங்களில் நாம் சமையல் செய்யும் போது, அதிக நேரம் செலவாவது பூண்டு மற்றும் வெங்காயம் உரிப்பதற்கு. கொஞ்சமாக உரிக்க வேண்டும் என்றால் செய்து விடலாம். ஆனால் அதிகமாக வெங்காயமோ அல்லது பூண்டோ தேவை படும் போது, அதன் தோலை உரிப்பதற்கு பாதி பொழுது ஆகி விடும். இதற்க்கு யாராவது மிஷின் கண்டுபிடிக்க மாட்டார்களா என்று தோன்றும். இனி நீங்கள் அதை பற்றி கவலை பட வேண்டும்.. இதற்க்கு ஒரு சுலபமான தீர்வு உள்ளது. அந்த தீர்வு என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
பூண்டு அல்லது சின்ன வெங்காயம் எதுவாக இருந்தாலும் நீங்கள் அதனுடைய தோலை உரிக்க அவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதனை சுலபமாக உரிக்க 2 வழி உள்ளது. ஒன்று, பூண்டு அல்லது சின்ன வெங்காயத்தை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தால் போதும். அதன் பிறகு ஒவ்வொன்றாக எடுத்து கத்தி வைத்து அதன் தலைப் பகுதியை இலேசாக நீக்கினால், சுலபமாக உரித்து விடலாம். இரண்டாவது, நீங்கள் அதிகமான நபருக்கு சமைக்கும் போது, கொதிக்கும் நீரில் வெங்காயம் அல்லது பூண்டை கொதிக்கும் நீரில் போட்டு, உடனடியாக குளிர்ந்த நீரில் போட்டால் சுலபமாக உரித்து விடலாம்.