For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இது எங்க கட்சி பிரச்சனை..!! நீங்க எப்படி தலையிடலாம்..? தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு..!!

AIADMK General Secretary Edappadi Palaniswami has filed a reply to the Election Commission, stating that the Election Commission cannot interfere in the party's internal affairs.
01:25 PM Dec 31, 2024 IST | Chella
இது எங்க கட்சி பிரச்சனை     நீங்க எப்படி தலையிடலாம்    தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு
Advertisement

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், "அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட கட்சி திருத்த விதிகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இது கட்சி விதிகளுக்கு அப்பாற்பட்டு உள்ளதால், இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது.

ஏனென்றால், இந்த விதிகள் என்பது எடப்பாடி பழனிசாமி மட்டுமே பொதுச்செயலாளராக போட்டியிடும் வகையில் உள்ளது. மேலும், ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறினாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

எனவே, இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் தீர்வு காணும் வரை இந்த திருத்த விதிகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது" என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் பதில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவருக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. பொதுக்குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும், தீர்மானங்களை சென்னை ஐகோர்ட் அங்கீகரித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Read More : “சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன்”..!! ”சும்மா விட மாட்டேன்”..!! டிஐஜி வருண்குமார் எச்சரிக்கை..!!

Tags :
Advertisement