முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”இது என் வீடு தான் பாத்ரூம் போய்ட்டு வா”..!! பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பலாத்காரம்..!! கன்னியாகுமரியில் அதிர்ச்சி..!!

The man forcibly dragged her to a nearby room and raped her multiple times.
04:51 PM Dec 30, 2024 IST | Chella
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், மாணவி உள்பட 14 மாணவிகளை கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உடற்பயிற்சி ஆசிரியர், கைப்பந்து போட்டியில் விளையாடுவதற்காக திருச்சி அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisement

டிசம்பர் 26ஆம் தேதி இரவு 9 மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு மீண்டும் திரும்பி வந்துள்ளனர். அப்போது, மற்ற மாணவிகளை அழைத்துச் செல்ல பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த மாணவி தன்னை அழைக்க அப்பா வந்து விடுவார் எனக்கூறி பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

இதையடுத்து, பள்ளிக்கு வெளியே அந்த மாணவி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்ததை கவனித்த 37 வயது மதிக்கத்தக்க ஒருவர், ‘ஏன் இங்கு நிற்கிறாய்’ எனக் கேட்டுள்ளார். அதற்கு பாத்ரூம் செல்ல வேண்டும் என அந்த மாணவி கூறியுள்ளார். உடனே, அருகில் இருக்கும் வீட்டைக் காட்டி ‘இது எனது வீடு தான், நீ மேலே மாடியில் பாத்ரூம் சென்று வா’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த மாணவியும் பாத்ரூம் சென்றுவிட்டு கீழே இறங்கி வந்த போது, அவரை அந்த நபர் வலுக்கட்டாயமாக இழுத்து, அருகில் உள்ள ஒரு அறைக்குக் கொண்டு சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், ஒரு கட்டத்தில் சிறுமி பலமாக கத்தியதால் வெளியே அனுப்பியுள்ளார். சிறுமி அழுதபடி வீட்டிற்குச் சென்றுள்ளார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணலிக்கரையைச் சேர்ந்த பைசல் கான் (37) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : ஆளுநரை சந்தித்த விஜய்..!! திடீரென புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ்..!! கொந்தளிக்கும் தவெகவினர்..!!

Tags :
கன்னியாகுமரி மாவட்டம்பள்ளி மாணவிபாலியல் பலாத்காரம்
Advertisement
Next Article