இந்த நோய்கள் இருப்பவர்கள் மஞ்சள் பாலை மறந்தும் கூட குடிக்காதீங்க..! ஏன் தெரியுமா.?
பொதுவாக குளிர் காலத்தில் பலரும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறோம். அப்படியிருக்க தொண்டைக்கு இதமாக பலரும் மஞ்சள் கலந்த பாலை காலை மற்றும் இரவு என இரு வேலைகளும் குடித்து வருகிறோம். ஆனால் ஒரு சில நோய்கள் இருப்பவர்கள் மஞ்சள் கலந்த பாலை குடிக்க கூடாது. ஏன் என்பதை குறித்து பார்க்கலாம்?
மஞ்சள் கலந்த பால் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
1. கல்லீரல் தொடர்பான நோய் பாதிப்பு இருப்பவர்கள் மஞ்சள் பாலை குடிக்க கூடாது. அவ்வாறு குடித்தால் வயிற்றில் வீக்கம் மற்றும் அமில தன்மை அதிகரிப்பு ஏற்பட்டு செரிமான கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் மேலும் பலவீனமடையும்.
2. ஹீமோகுளோபின் குறைவு - ஹீமோகுளோபின் ரத்தத்தில் குறைவாக இருப்பவர்கள் மஞ்சள் பாலை தொடர்ந்து குடித்து வந்தால் இரும்புச்சத்து குறைந்து ரத்த சோகை ஏற்படும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் உடலில் அடிக்கடி ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படும். அப்படி இருப்பவர்கள் மஞ்சள் பாலை கட்டாயமாக குடிக்கக் கூடாது.
3. வயிற்றுப்போக்கு - வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் இருக்கும் நேரத்தில் ஒரு சிலர் மஞ்சள் பால் அருந்துவார்கள். ஆனால் இது உடல் நிலையை மேலும் பாதிக்கும். மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் இது வயிற்றுப்போக்கை அதிகப்படுத்தி வயிற்றில் புண் போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது.