For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூ.4,000 கோடி கமிஷன் அடிக்கவே இந்த அறிவிப்பு..!! முதல்வர் இதைச் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்..!! அண்ணாமலை அதிரடி..!!

10:52 AM Apr 08, 2024 IST | Chella
ரூ 4 000 கோடி கமிஷன் அடிக்கவே இந்த அறிவிப்பு     முதல்வர் இதைச் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்     அண்ணாமலை அதிரடி
Advertisement

கிரிக்கெட் மைதானம் கட்டினால் 4,000 கோடி ரூபாய் அளவுக்கு கமிஷன் அடிக்கலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சரவணம்பட்டி, கரட்டுமேடு, கேஜி பேக்கரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”கோவை மாநகரில் ஏராளமான பிரச்சனைகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 100 மீட்டருக்கு நடந்து சென்றால், சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதையெல்லாம் திமுகவினர் சரி செய்யவில்லை. பாஜக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தோம். இதைக் கேட்டவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்”

மேலும், கிரிக்கெட் மைதானம் எதற்காக காட்டப்படுகிறது என்றால் ரூ.4,000 கோடி வரை கமிஷன் அடிக்கலாம் என்பதற்காகத்தான். முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் குறைந்தபட்சம் 100 மீட்டருக்கு சேதமடையாத சாலையில் நடந்து சென்றால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையை மேம்படுத்த ரூ.1,445 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனாலும், கோவையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

Read More : Gold Rate | புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை..!! ஒரு சவரன் ரூ.53,000-ஐ கடந்தது..!!

Advertisement