அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு..!! துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிரடி..!!
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்க்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்களில் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கதிர் ஆனந்த வேலூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட வருமான வரித்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு, கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் சோதனை நடத்தியது.
இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சத்து 57 ஆயிரத்து 10 பறிமுதல் செய்யப்பட்டது. பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்களில் 11 கோடியே 51 லட்சத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பணப்பட்டுவாடா செய்யத்தான் அந்த பணத்தை வைத்திருந்துள்ளார் என சந்தேகிக்கும் அளவில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களும் வைத்திருந்துள்ளனர். அதையும் பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.
Read More : டேங்கர் லாரி கவிழ்ந்ததால் லீக்கான கேஸ்..!! பள்ளிகளுக்கு விடுமுறை..!! கோவையில் பரபரப்பு..!!