திருவண்ணாமலை தீப திருவிழா.. மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி உண்டா?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மிக முக்கிய திருவிழாவான உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை கோயிலின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகாதேரோட்டம் இன்று நடைபெறவுள்ளது. மேலும் வருகிற 13-ம் தேதி அண்ணமலையார் கோயில் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 2ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து மேலும் 2 இடங்களில் ஒரே நாளில் மண்சரிவு ஏற்பட்டது. கார்த்திகை தீபத் திருநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதால் மலையேறி செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வியும், குழப்பமும் பக்தர்களிடம் எழுந்தது.
மகாதீபத்தை காண மலையேறி செல்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? மாட்டார்களா? என்பது குறித்து அரசும், மாவட்ட நிர்வாகமும் தான் முடிவு செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது. டிசம்பர் 11 ம் தேதி முதல் மீண்டும் திருவண்ணாமலை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையமும் கூறி உள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. இதனால் திருவண்ணாமலை பக்தர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
Read more ; அடடே.. குளிர் காலத்தில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?