டியூஷன் சாருடன் காதல்..!! ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி..!! அங்கன்வாடி கட்டிடத்திற்குள் நடந்த பயங்கரம்..!!
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஜேபி காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி பள்ளி சிறுமி ஒருவரை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில், சிறுமி டியூஷன் படித்து வந்த இடத்தில் அபிஷேக் கவுடா என்ற ஆசிரியர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் காணாமல் போன சிறுமி அபிஷேக் கவுடா நடத்தி வந்த டியூசனில் படித்து வந்துள்ளர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. மேலும், 25 வயதான அபிஷேக் கவுடாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் தான், அந்த சிறுமி தன்னுடன் அழைத்துக் கொண்டு அபிஷேக் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், மானவள்ளி பகுதியில் பதுங்கியிருந்த அபிஷேக் கவுடாவை கைது செய்தனர். அவர் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
8 வயது சிறுமி பலாத்காரம்
இதேபோல், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிம்டீகா மாவட்டத்தில் ஜல்டிகா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அவரது குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி கடந்த இரவு வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுள்ளான். ஏற்கனவே, குடிபோதையில் இருந்த அவன், அங்கிருந்த அங்கன்வாடி கட்டிடத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்று சென்றதோடு மட்டுமல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த விவகாரத்தை சிறுமி வெளியே சொல்லிவிடுவாள் என்ற பயத்தில் அவரை கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது, ஏதேச்சையாக அவ்வழியாக சென்றவர்கள் சிறுமியின் முனகல் சத்தம் கேட்டு துரிதமாக அந்த இடத்திற்கு சென்று அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதையடுத்து. போலீசில் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.