”இந்த ட்விஸ்ட எதிர்பார்த்துருக்க மாட்டாங்க”..!! சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளையே சோதனை செய்த திமுகவினர்..!!
அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் இருவருமே வீட்டில் இல்லாததால், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடங்குவது தாமதம் ஏற்பட்டது. வெளிநாட்டில் இருப்பதாக கூறும் கதிர் ஆனந்தை தொடர்பு கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனை குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அவர், இமெயில் மூலம் சோதனை நடத்த ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த மெயிலில் எம்பி தரப்பில் யார் யார் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். எம்பி தரப்பில் காட்பாடி வடக்குப்பகுதி செயலாளர் சுனில் குமார் உள்ளிட்டோரின் பெயர் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நடைமுறைகள் காரணமாக சோதனை தொடங்குவதற்கு கால தாமதம் ஆனது. பின்னர், சுமார் 7 மணி நேர தாமத்திற்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கியுள்ளனர்.
சோதனை தொடங்க சென்ற அதிகாரிகளிடம் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா..? என திமுகவினர் சோதனை செய்தனர். அதிகாரிகளின் பர்ஸ் உள்ளிட்டவற்றை திமுகவினர் சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினர். பெண் அதிகாரிகள் வைத்திருந்த ஹேண்ட்பேக்குகள், லேப்டாப்கள் ஆகியவற்றையும் சோதனை செய்து பார்த்தனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.