நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த 10 விஷயங்களை தினமும் கண்டிப்பாக செய்து பாருங்க.!?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் வீட்டில் சமைத்த உணவுகளை விட ஹோட்டல்களில் சமைக்கும் உணவுகளை விரும்பி சாப்பிட ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு ஹோட்டல்களில் சமைக்கும் உணவுகள் அதிகமாக பதப்படுத்தப்பட்டதாகவும், துரித உணவுகளாகவும் இருப்பதால் இதில் ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லாமல் உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது.
அந்த காலகட்டத்தில் நம் முன்னோர்கள் வீட்டில் சமைத்த ஊட்டச்சத்தான உணவுகளுடன், கடின உழைப்பையும் செய்து வந்தனர் இதனால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். தற்போது பலரும் அதிக உடல் எடையுடன் நோய்வாய்ப்பட்டு மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதற்கு ஒரு சில பழக்க வழக்கங்களை கடைபிடித்தால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். அவை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
1. தினமும் காலையில் கண்டிப்பாக உணவு சாப்பிட வேண்டும். ஒரு சிலர் காலை உணவை சாப்பிடுவதை தவிர்கின்றனர். ஆனால் இது உடலுக்கு மிகவும் கேடு ஏற்படுத்தும்.
2. தினமும் ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு ஏற்றது போல தண்ணீர் பருக வேண்டும். இது சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.
3. இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு இரவு 11 மணிக்கு தூங்கி, காலை சூரிய உதயத்தின் போது எழுந்திருப்பது பித்தப்பைக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.
4. மிகவும் குளிர்ந்த உணவு மற்றும் குளிர்பானம் அல்லது பழைய உணவை உண்பது சிறு குடலுக்கு கேடு விளைவிக்கும்.
5. எண்ணெயில் பொரித்த உணவுகள் அல்லது அளவுக்கு அதிகமான காரமான உணவுகளை எடுத்துக் கொள்வது பெருங்குடலுக்கு தீங்கு ஏற்படுத்தும்.
6. புகை, மாசு மற்றும் சிகரெட் புகை போன்றவை நுரையீரலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. அந்த இடங்களில் இருப்பது கூட தவிர்ப்பது நல்லது.
7. துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது கல்லீரலுக்கு கேடு.
8. அதிக உப்பு அல்லது அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு கேடு.
9. இரவில் அதிக நேரம் செல்போன் மற்றும் கணினி போன்ற பொருட்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
10. எப்போதும் எதிர்மறை எண்ணங்களையும், எதிர்மறை ஆற்றல்களையும் தவிர்ப்பது மன ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலே குறிப்பிட்ட செயல்முறைகளை நம் வாழ்க்கையில் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் வாழலாம்.