கவனம்!! மறந்தும் கூட, இவர்கள் எல்லாம் பப்பாளியை சாப்பிட கூடாது...
பலருக்கு பிடித்த பழங்களில் ஒன்று என்றால் அது பப்பாளி தான். விலை சற்று குறைவாக இருந்தாலும் எண்ணற்ற நன்மைகளை கொண்ட பப்பாளி பழத்தை மருத்துவ நிபுணர்ககள் மட்டுமின்றி ஊட்டச்சத்து நிபுணர்களும், மக்களை அடிக்கடி சாப்பிட பரிந்துரைக்கின்றனர். திரும்பும் திசை எல்லாம் நோய் பரவும் அபாயம் உள்ள இந்த காலகட்டத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது கட்டாயம். அந்த வகையில், பப்பாளியை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்.
பப்பாளி மட்டும் இல்லாமல், பப்பாளியின் விதை, இலை என அனைத்திலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. பப்பாளியில் நார்ச்சத்து, வைட்டமிண் சி போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம். என்ன தான் பல நன்மைகளை கொடுத்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். ஆம், பப்பாளியை அளவுக்கு மீறி சாப்பிட்டாலும் பிரச்னை தான். மேலும், ஒரு சிலர் பப்பாளியை சாப்பிடாமல் இருப்பதே நல்லது. பப்பாளியை யாரெல்லாம் சாப்பிட கூடாது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் பப்பாளியை சாப்பிட கூடாது. எனேட்ரால், இதய நோய் உள்ளவர்கள் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்காக மருந்துகளை உட்கொள்வார்கள். அந்த வகையில் பப்பாளியை சாப்பிடும் போது, அவர்களுக்கு காயம் ஏற்பட்டால், அதிக அளவு ரத்தப்போக்கு நிக்காமல் ஏற்படும் அபாயம் உள்ளது. உடலில் ஏதாவது அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளியை சாப்பிட கூடாது. ஏனென்றால், பப்பாளியில் உள்ள Papain, உடலில் உள்ள அலர்ஜியை அதிகரிக்கும். இதனால் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும்.
பப்பாளியில் வைட்டமிண் சி அதிகம் இருப்பதால், சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை சாப்பிடக்கூடாது. சுவாச பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை சாப்பிட்டால் அதில் உள்ள நொதிப்பொருள்கள் பிரச்னையை உண்டாக்கும். இதனால் ஆஸ்துமா நோயாளிகள் பப்பாளியை சாப்பிட வேண்டாம். அதே போல், நம் அனைவருக்கும் தெரிந்தவாறு, கர்ப்பிணிகள் பப்பாளியை சாப்பிட வேண்டாம்.
Read more: