நீரிழிவு நோய் பிரச்சினையை கட்டுப்படுத்த இந்த சூப் குடித்தாலே போதும்.!?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் நீரிழிவு நோய் தாக்கம் மிகப்பெரும் பாதிப்பாக இருந்து வருகிறது. நீரிழிவு நோய் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணங்களாக பல கூறப்பட்டு வந்தாலும் முக்கிய காரணங்களில் ஒன்று உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது தான். அந்த வகையில் உணவு பட்டியலில் இந்த சூப்களை சேர்த்து கொண்டாலே போதும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
1. முருங்கை இலை சூப் -முருங்கை மரத்தின் இலைகளை காம்பு நீக்கி ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விட வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு போன்றவற்றை சேர்த்து கொதிக்க விடவும். பின் இவற்றை அரைத்து வேகவைத்த முருங்கை இலைகளுடன் சேர்த்து குடித்து வரலாம்.
2. பாகற்காய் சூப் - தேவையான அளவு பாகற்காய் துண்டுகள், தக்காளி, சின்ன வெங்காயம், சீரகம், வெள்ளைப்பூண்டு, மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மேஜிக் போல் குறையும்.
3. சேப்பங்கிழங்கு இலைகளை அரைத்து சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்கு வரும். மேலே குறிப்பிட்டவற்றை உணவு பட்டியலுடன் வாரத்திற்கு இரண்டு நாட்கள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் வரும்.
Also Read: சளி என அலட்சியம் வேண்டாம்!… தொண்டை புற்றுநோயாக இருக்கலாம்!… அறிகுறிகள் இதோ!