சர்க்கரைக்கு பதிலாக இந்த ஒரு பொருளை பயன்படுத்தி பாருங்க.! உடலில் வேற லெவல் மாற்றம் ஏற்படும்.!?
நாம் அன்றாடம் காலையில் எழுந்து குடிக்கும் டீ மற்றும் காபி போன்றவற்றில் பயன்படுத்தும் சர்க்கரையினால் நம் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகிறது. டீ காபியில் மட்டுமல்லாமல் நாம் உண்ணும் பல உணவு பொருளில் சர்க்கரை கலந்துள்ளதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனை போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. சர்க்கரைக்கு பதில் தினமும் பனங்கற்கண்டு உபயோகப்படுத்தி டீ மற்றும் காபி குடித்து வரலாம்.
மேலும் இந்த பனங்கற்கண்டு சித்த வைத்திய முறையில் முக்கியமான இடத்தை பிடித்து வருகிறது. பதநீரை காய்ச்சி செய்யப்படும் பனங்கற்கண்டில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவ்வாறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பனங்கற்கண்டை வீட்டில் சமைக்கும் இனிப்புகளிலும் சர்க்கரைக்கு பதிலாக சேர்த்துக் கொள்ளலாம்.
பனங்கற்கண்டினால் உடலில் ஏற்படும் நன்மைகள்: தினமும் காலையில் பால், மஞ்சள் இவற்றுடன் பனங்கற்கண்டை காய்ச்சி குடித்து வந்தால் சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் சரியாகும். சிறுநீர் பாதை தொற்று, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், உடல் சூடு போன்றவற்றையும் பனங்கற்கண்டு சரி செய்யும். பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாக்டீரியா மற்றும் வைரஸினால் ஏற்படும் நோயை குணப்படுத்தும்.
மேலும் கர்ப்பிணிகளுக்கு சூட்டினால் அடிவயிற்றில் வலி ஏற்படும். இதற்கு சுடுதண்ணீரில் பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் சரியாகும். சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் அறிவுரையுடன் சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டை குறைந்த அளவு பயன்படுத்தலாம். இவ்வாறு பனங்கற்கண்டு உடலில் பல்வேறு நோய்களை தீர்த்து அருமருந்தாக இருந்து வருகிறது.