மீனுடன் இந்த உணவை சேர்த்து சாப்பிட்டால் நுரையீரல் பாதிப்பு, மூச்சு விட கடினமாகும்…! முழு விவரம்..!
பொதுவாக நாம் வீட்டில் சமைத்து உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருந்து வந்தாலும் ஒரு சில உணவுகளை உண்ணும் போது மற்ற உணவுகளை அதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மீன் சாப்பிட்டதும் ஒரு சில உணவுகளை கண்டிப்பாக உண்ணக்கூடாது. மீறி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகும் என்று குறிப்பிட்டுள்ளனர். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
1. பொதுவாக மீனை வைத்து சமைத்த எந்த உணவுகளை சாப்பிட்டாலும் அந்த நாள் முழுவதும் முள்ளங்கியை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. மீன் மற்றும் முள்ளங்கி இரண்டும் எதிர் எதிர் பண்புகளை கொண்டுள்ளதால் இதனை ஒன்றாக சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகும்.
2. பொதுவாக கீரைகளுடன் அசைவ உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் குறிப்பாக பசலைக் கீரையுடன் மீன் சார்ந்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவது வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
3. மீன் சாப்பிட்ட பிறகு தேன், துளசி போன்றவற்றை சாப்பிடக்கூடாது. இது நுரையீரல் பாதிப்பு, மூச்சு விட கடினமாகுதல், வாந்தி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
4. ஒரு சிலர் மீன் குழம்பு சாப்பிட்டவுடன் தயிர் சோறு சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவது செரிமானத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
5. இரவு அல்லது பகல் நேரத்தில் மீன் சாப்பிட்ட பின் பால் மற்றும் பால் பொருட்கள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வாந்தியை ஏற்படுத்தும்.