எலும்புகளை பலப்படுத்த இந்த 5 உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.! ஏன் தெரியுமா.!
நம் உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு எலும்புகள் முக்கியமான ஒரு உறுப்பாக இருந்து வருகிறது. எனவே எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். பால் மற்றும் முட்டை போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு சில உணவுப் பொருட்கள் எலும்புகளில் கால்சியத்தை குறைத்து பலவீனப்படுத்துகிறது. அப்படிப்பட்ட உணவுகளை கட்டாயமாக உண்பதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன உணவுகள் என்பதை குறித்து பார்க்கலாம்?
1. உப்பு அதிகம் உள்ள உணவுகளான பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளில் உள்ள சோடியம் எலும்புகளில் உள்ள கால்சியத்தை குறைத்து பலவீனப்படுத்துகிறது.
2. அதிக சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் போது எலும்புகள் எளிதில் பலவீனமடைந்து மூட்டு வலி, முதுகு வலி ஏற்படும். மேலும் எலும்புகள் சம்பந்தப்பட்ட பல நோய்களையும் ஏற்படுத்தும்.
3. காபி, டீ போன்றவற்றை அதிகமாக குடித்து வந்தால் உடலில் உள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்காமல் செய்கிறது. இது உடலுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
4. அதிகளவு புரோட்டின் நிறைந்த உணவுகளை உண்ணும் போது உடலில் உள்ள கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற மற்ற சத்துக்கள் உடலில் குறைந்து விடுகின்றன. புரோட்டின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து என்றாலும் அளவுக்கு அதிகமாக ப்ரோட்டின் நிறைந்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
5. கடைகளில் விற்கப்படும் சோடா மற்றும் கார்பனேட்டட் செய்யப்பட்ட குளிர்பானங்களை அடிக்கடி குடிக்க கூடாது. இது உடலில் உள்ள அமிலத்தன்மையை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு அமிலத்தன்மை அதிகமாகுவதால் எலும்பில் உள்ள கால்சியத்தை உறிஞ்சுகிறது.
மேலே குறிப்பிட்ட உணவு பொருட்களை உண்பதை தவிர்ப்பதன் மூலம் எலும்புகளை பலப்படுத்தி 80வயதிலும் குழந்தையைப் போல துள்ளி குதித்து ஓடலாம்.