இந்த உணவுகளை காலை நேரத்தில் கட்டாயமாக சாப்பிட கூடாது.? ஏன் தெரியுமா.!?
பொதுவாக காலை உணவை வலிமையையும், ஊட்டச்சத்தையும் உடலில் சேர்க்கும் உணவாக தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். காலை நேரத்தில் நாம் சாப்பிடும் உணவு அன்றைய நாளுக்குரிய ஆற்றலை தருகிறது என்பதால் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக சாப்பிட வேண்டும். ஒரு சில உணவுகள் ஊட்டச்சத்தானதாக இருந்தாலும், காலை நேரத்தில் அதை சாப்பிடக்கூடாது. காலை நேரத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை குறித்து பார்க்கலாம்?
1. ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, அன்னாசி பழம் போன்ற பழங்களில் சிட்ரஸ் அமிலம் நிறைந்துள்ளதால், இதை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இது வயிற்றில் உள்ள அமிலங்களை அதிகப்படுத்தி நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண்ணை ஏற்படுத்தும்.
2. பலரும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி, டீ போன்ற பானங்களை குடித்து வருகின்றனர். இது வயிற்றில் அமிலங்களை அதிகப்படுத்தி புண்கள் உருவாக காரணமாக இருக்கும்.
3. அதிக காரம் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை காலையில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
4. பிஸ்கட், பிரெட் போன்ற மைதாவில் செய்த உணவு பொருட்களை காலையில் சாப்பிடும் போது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
5. கார்பனேட் நிறைந்த குளிர்பானங்களை வெறும் வயிற்றில் குடிக்க கூடாது. இதில் உள்ள அதிக சர்க்கரை நீரிழிவு பிரச்சனையை உருவாக்கும்.
6. பச்சையான வேக வைக்காத காய்கறிகளை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது செரிமான கோளாறு ஏற்படுத்துகிறது.
7. கேக் மற்றும் அதிக இனிப்பான பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல . மேலே குறிப்பிட்ட உணவுப்பொருட்களை கண்டிப்பாக காலையில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.