பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்!! பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்...
உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் இயற்கை ஆர்வலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், சாகச விரும்பிகள் மற்றும் உணவு பிரியர்களுக்கும் 100 சதவீத கனவு இடமாக கோவா உள்ளது. கோவாவில் உள்ள அர்வலேம் குகைகளைப் பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அர்வலம் குகைகள் பனாஜியில் இருந்து 31 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வடக்கு கோவாவின் சான்கெலிம் கிராமத்தில் அமைந்துள்ளன.
இந்த குகைகள் 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று கூறப்படுகிறது. இது பாண்டவ குகைகள் என்றும் அழைக்கப்படுகிறது. மகாபாரத காவியத்தில் இருந்து பாண்டவ சகோதரர்கள் – யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் தங்களது 12 ஆண்டு வனவாச காலத்தில் இங்கு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இதற்கிடையே, வேறு சில அறிஞர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகள் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீர், கௌதம புத்தரின் பெரிய சிலைகளை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முழு குகையையும் ஒற்றை கல்லில் இருந்து செதுக்கியதாக நம்பப்படுகிறது. இந்த குகையை பொதுமக்கள் பார்வையிட, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. அறியப்படாத அர்வலேம் நீர்வீழ்ச்சிகள் கோவாவின் மிகப்பெரிய பொக்கிஷங்களில் ஒன்றாகும்.
இந்த நீர்வீழ்ச்சிகள் குகைகளிலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. இது 70 அடி உயரத்தில் இருந்து வெளியேறி ஒரு குளம் அல்லது ஒரு ஏரியை உருவாக்குகிறது. ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் நீர்வீழ்ச்சிகளை நீங்கள் பார்வையிடலாம், ஏனெனில் ஆண்டு முழுவதும் ரம்மியமான காலநிலை இருக்கும். கோவாவின் கடற்கரைகளை விட, மறைக்கப்பட்ட அல்லது அறியப்படாத குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை அதிக பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
Read more ; உஷார்!! அடிக்கடி ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? ‘ஷாப்பிங் டிஸார்டர்’ என்ற மன நோய்க்கு வித்திடும்!!