குக்கரில் சமைக்கவே கூடாத உணவுகள் இவைதான்..!! என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா..?
இன்றைய அவசர காலக்கட்டத்தில் சமையல் பணியை விரைந்து முடிக்கவும், சில நிமிடங்களிலேயே சமையலை முடிக்கவும் குக்கர் மிகவும் எளிய வசதியாக இருக்கிறது. இதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறியாமலேயே பலர் பிரஷர் குக்கர்களில் பலவிதமான உணவுகளைத் தயார் செய்கின்றனர். பிரஷர் குக்கரில் நீங்கள் சமைக்கவே கூடாத சில பொருட்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா..? அதுபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
அரிசி : முன்பெல்லாம் சாதத்தை வடித்து தான் சாப்பிடுவார்கள். ஆனால், இப்போது பெரும்பாலோனோர் சாதத்தை குக்கரில் சமைக்கின்றனர். எனவே, அரிசியை சமைக்க பிரஷர் குக்கரைப் பயன்படுத்த நீங்கள் யாரேனும் இருந்தால் அதைக் கைவிட வேண்டிய நேரம் இது. இதனால், உடலில் அதிகப்படியான கொழுப்பை உடனடியாக சேமித்து வைக்கும்.
குக்கரில் அரிசியை சமைக்கும் போது, மனித ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் உருவாகிறது. அரிசியின் ஸ்டார்ச் செறிவு அபாயகரமான இரசாயனமான அக்ரிலாமைடு உமிழ்வுக்கு வழிவகுக்கும். முடிந்தவரை அரிசியை பாத்திரத்தில் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
கீரை : நம்மில் பெரும்பாலானோர் கீரையை குக்கரில் வேக வைப்போம். ஆனால், கீரையை குக்கரில் சமைக்கவே கூடாது. பொதுவாக, கீரையை குறைந்த வெப்பநிலையில் சமைக்க வேண்டும். அப்போது கீரையின் சத்துக்கள் மாறாமல் இருக்கும். குக்கரில் அதிக வெப்பநிலையில் சிறிது நேரம் வேகவைத்த கீரை அதன் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைக்கிறது. குக்கரில் சமைத்த கீரையை சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உருளைக்கிழங்கு : நம்மில் பெரும்பாலோர் உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் வேகவைக்கிறோம். உருளைக்கிழங்கில் அரிசியைப் போலவே அதிகளவு மாவுச்சத்து உள்ளது. உருளைக்கிழங்கு அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது அதன் மாவுச்சத்தை இழக்கிறது. மேலும், உடலுக்கு சரியான ஊட்டச்சத்தைப் பெறுவதைத் தடுக்கிறது. அதனால்தான் அவற்றை வேகவைப்பது அல்லது பிரஷர் குக்கரில் சமைப்பது நல்ல யோசனையல்ல.
பிஸ்தா : பிஸ்தாவின் சில நன்மைகளில் மேம்பட்ட கண் ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவை அடங்கும். குக்கரில் பிஸ்தாவை சமைத்தால் அதிக கொழுப்பு சேரும். சத்துக்கள் குறையும். எனவே, குக்கரைத் தவிர்த்து, சாதாரண பாத்திரத்தில் வேக வைக்க முயற்சிக்கலாம்.
காய்கறிகள் : பிரஷர் குக்கரில் சமைக்கும் போது, காய்கறிகளில் அதிகமுள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அழிக்கப்படுகின்றன. பிரஷர் குக்கரில் அதிக வெப்பத்தில் சமைத்தால் காய்கறிகளில் உள்ள அனைத்து புத்துணர்ச்சி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும்.
Read More : குடும்பத்தில் அமைதி நிலவ நிர்வாண பூஜை..!! நண்பனால் விபரீத முடிவெடுத்த கணவன்..!! மனைவி பரபரப்பு புகார்..!!