For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த 7 உணவுகளை கட்டாயம் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாது..!! மீறினால் உயிருக்கே ஆபத்து..!!

In this post, you can see about 7 types of food that should not be reheated.
05:10 AM Aug 13, 2024 IST | Chella
இந்த 7 உணவுகளை கட்டாயம் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாது     மீறினால் உயிருக்கே ஆபத்து
Advertisement

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத 7 உணவு வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

பிரியாணி : அனைவருக்கும் பிடித்த உணவு என்றால், அது பிரியாணியாகத்தான் இருக்கும். ஆனால், நாம் செய்யும் மிகப்பெரிய தவறு பிரியாணியை சூடு படுத்தி சாப்பிடுவது. இப்படிச் சாப்பிடும்போது நமது உணவு மண்டலம் வெகுவாக பாதிப்படைந்து உடல் நலம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

கோழி : கோழியில் அதிகளவு பாக்டீரியாக்கள் உள்ளன. இதை சரியாக சமைக்காமல் சாப்பிட்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் சேர்ந்துவிடும். அதைவிட மிகவும் முக்கியம் கோழியால் செய்த உணவுகளை திரும்பத் திரும்ப சூடு படுத்தும்போது, பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்.

முட்டை உணவு : முட்டை உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான புரதம் அதிகம் இருக்கிறது. ஆனால், முட்டையை வைத்து செய்யப்பட்ட உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி உண்டால் அது வாயு கோளாறுகளை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதித்து விடுகிறது.

காளான் : காளானில் உள்ள செலினியம் எலும்புகளின் உறுதித் தன்மையை ஊக்குவிக்கிறது. இது இரும்பு சத்து அதிகம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காளான் உணவை மீண்டும் சூடு படுத்துவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற வயிற்று பிரச்னைகளை உண்டாக்கி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்.

கீரைகள் : அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள கீரையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அது ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

உருளைக்கிழங்கு : இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடுகையில், கலோரிகள் குறைவாக இருந்தாலும், இவற்றை வேகவைத்து சாப்பிடுவதுதான் சிறந்தது. எனவே, உருளைக்கிழங்கு பயன்படுத்தி சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்துவதால் அவை உடலுக்குத் தீங்காக மாறி விடுகிறது.

பீட்ரூட் : இரும்புச்சத்து, வைட்டமின் பி12 சத்துகளை கொண்டிருக்கும் பீட்ரூட் கிழங்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்வதாக கூறப்படுகிறது. இந்த பீட்ரூட்டை பயன்படுத்தி சமைத்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடும் பொழுது அவை விஷமாக மாறிவிடும்.

    Read More : அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்வா..? வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு..!!

    Tags :
    Advertisement