வரும் 20ஆம் தேதி மீண்டும் சம்பவம் இருக்கு..!! இன்று 8 மாவட்டங்களில் பொளக்க போகும் கனமழை..!!
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றைய தினம் (அக்.17) அதிகாலை 4.30 மணியளவில் வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் - நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.
இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியில் வரும் 20ஆம் தேதி வளிமண்டல சுழற்சி ஒன்று உருவாக உள்ளது. இது வலுப்பெற்று 22ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக உள்ளது. பின்னர், வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இந்திய வானிலை மையத்தின் தற்போதைய வானிலை அறிக்கையின் படி, இன்று 8 மாவட்டங்களிலும் நாளை 6 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும்..!! ICMR எச்சரிக்கை..!!