’எதிர்த்து போட்டியிட யாருமே இல்ல’..!! ’ஆனாலும் தோல்வியை சந்தித்த நிக்கி ஹாலே’..!! அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரஸ்யம்..!!
அமெரிக்க குடியரசு கட்சியின் சார்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக வேட்பாளர் தேர்வில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, தன்னை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் தோல்வியை தழுவினார்.
அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் அது ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அதிபராக உள்ளார். இந்தாண்டு அவரின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.
அதற்கு மாகாணங்கள்தோறும் தேர்வு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். அதனடிப்படையில் பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளரை தேரந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி, தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் மற்றும் பலர் களத்தில் இருந்தனர்.
அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி தெரிவித்தார். தொடர்ந்து அனைவரும் விலகிய நிலையில், நிக்கி ஹாலே மட்டும் களத்தில் உள்ளார். இந்நிலையில், நெவாடா மாநிலத்தில், குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வு நேற்று நடைபெற்றது. வாக்குச்சீட்டில் ட்ரம்பின் பெயர் இடம்பெறவில்லை. வாக்குச்சீட்டில் நிக்கி ஹாலே பெயர் மட்டுமே இருந்துள்ளது. ஆனாலும், இந்தியாவில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை குறித்தும் நோட்டா போல் அங்கு வேட்பாளர்கள் யாரும் இல்லை என்ற வசதி இருந்தது. இதற்கு ஆதரவாக 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இதன் மூலம் ஹாலே தோல்வியை சந்தித்தார். இந்த தோல்வி அதிபர் தேர்தலில் வேட்பாளராக நினைக்கும் அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.